பொருளாதரத்தில் மிகவும் பின்தங்கிய நிலை தரமான உயர்கல்வி கற்க வேண்டும் என்பது பெரும்பாலான மாணவ, மாணவிகளின் கனவாக இருந்து வருகிறது. இந்நிலையில், 26 வயதான யுக்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவி தரமான உயர்கல்வி பயில வேண்டும் என விருப்பம் கொண்டிருந்தார். பொருளாதரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த பட்டியலின மாணவி யுக்தியால், உயர்கல்விக்கு செலவிட முடியாத நிலை இருந்தது. தேசிய வெளிநாட்டு உதவித்தொகை இந்நிலையில், மத்திய அரசின் தேசிய வெளிநாட்டு உதவித்தொகை (National Overseas Scholarship) திட்டத்தின் கீழ் யுக்தி விண்ணப்பம் செய்திருந்தார். இதைத்தொடர்ந்து, அவருக்கு வெளிநாட்டில் படிக்க தேவையான நிதி, பராமரிப்பு நிதி ஆகியவை வழங்கப்பட்டன. இதன்மூலம் வெளிநாட்டில் உயர்கல்வி முடித்த யுக்தி, பொருளாதரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி கற்றுத்தருகிறார். தனது கனவு நனவானதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார். மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2328432®=6&lang=11 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் அலுவலகம்