நிதி நெருக்கடி மகாராஷ்டிராவின் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இளம் மாணவரான திரு ராஜேஷ் ஷெட்ஜ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), கல்வியில் மிகுந்த ஈடுபாட்டையும், சர்வதேச அளவில் புகழ்பெற்ற கல்வி நிறுவனமொன்றில் உயர்கல்வி பயில வேண்டும் என்ற விருப்பத்தையும் கொண்டிருந்தார். எனினும், நிதி நெருக்கடியால், வெளிநாட்டில் கல்வி கற்பது, ஒரு பெரும் சவாலாக அமைந்தது. தேசிய வெளிநாட்டு உதவித்தொகை 2025–26 நிதியாண்டில், மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் தேசிய வெளிநாட்டு உதவித்தொகைத் திட்டத்தின் [National Overseas Scholarship (NOS) Scheme] கீழ், கல்விக் கட்டணமாக 39,800 பவுண்ட் , பராமரிப்புச் செலவுக்கு 9,900 பவுண்ட் உடன், விமானக் கட்டணம், விசா கட்டணம், காப்பீடு, இதர கல்விச் செலவுகளுக்கான நிதி உதவி வழங்கப்பட்டது. இந்த உதவி, அவரது குடும்பத்தின் நிதிச் சுமையைக் கணிசமாகக் குறைத்ததுடன், தரமான சர்வதேசக் கல்வியைப் பெறுவதற்கு அவருக்கு வழிவகை செய்தது. உதவித்தொகை வழியே சர்வதேச உயர்கல்வி தேசிய வெளிநாட்டு உதவித்தொகைத் திட்டத்தின் ஆதரவுடன், திரு ஷெட்ஜ், தற்போது இங்கிலாந்தில் உள்ள லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் கட்டுமானப் பொருளாதாரம் மற்றும் மேலாண்மையில் முதுகலைப் பட்டப்படிப்பை மேற்கொண்டு வருகிறார். அவர் விரிவுரைகள், பயிற்சிகள், இதர கல்விசார் நடவடிக்கைகளில் தீவிரமாகப் பங்கேற்று, சர்வதேசக் கல்வித் தரநிலைகள், மேம்பட்ட ஞானம், கட்டுமான மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளில் உள்ள தொழில்முறை நடைமுறைகள் குறித்த அனுபவத்தைப் பெறுகிறார். மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2334785®=48&lang=2 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் அலுவலகம்