ஸ்டேட் பாங்க் ஆப் சவுராஷ்டிராவில் படிப்பதற்கு கடன் பெறுவது பற்றி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

கல்விக் கடன் தொகை அளவு

இந்தியாவில் படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக பத்து லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.

வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக 20 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.

செலுத்த வேண்டிய முன்தொகை

நான்கு லட்சம் ரூபாய் வரை-எதுவுமில்லை

நான்கு லட்சம் ரூபாய்க்கு அதிகமாக- இந்தியாவில் படிக்கும் மாணவர்கள் ஐந்து சதவீதம்; வெளிநாட்டில் படிக்கும் மாணவர்கள் 15 சதவீதம்

கடனை திருப்பி செலுத்தும் முறை

வேலை கிடைத்த பிறகு அல்லது படிப்பை முடித்த ஒரு ஆண்டிற்கு பிறகு(இரண்டில் எது முதலில் வருகிறதோ) கடனை திருப்பி செலுத்த வேண்டும். ஐந்து முதல் ஏழு ஆண்டுகளுக்குள் கடன் தொகையை திருப்பி செலுத்த வேண்டும்.

உத்தரவாதம்

நான்கு லட்சம் ரூபாய் வரை

சொத்து பிணை தேவையில்லை.

நான்கு லட்சம் ரூபாய் முதல் ஏழு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை

மூன்றாம் நபர் உத்தரவாதம் தேவை ஏழு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல்:சொத்துப்பிணை, கடன்தொகையை திருப்பி செலுத்துவதாக பெற்றோர், மாணவர் அல்லது மூன்றாவது நபர் ஒப்புதல்.