நிதி பற்றாக்குறையால் எந்தவொரு மாணவரும் உயர் கல்வியைத் தவறவிடாமல் இருப்பது மிகவும் அவசியமாகும். வங்கிகளால் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி கடன் பற்றிய தகவல்களை வழங்குவது மற்றும் ஒற்றை சாளர முறையில் விண்ணப்பிக்க உதவுவது வித்யா லட்சுமி போர்ட்டல் ஆகும். பிரதான் மந்திரி வித்யா லட்சுமி காரியக்ரம் முழு தகவல் தொழில்நுட்ப அடிப்படையில் மாணவர் நிதி உதவி ஆணையத்தின் மூலம் பிரதான் மந்திரி வித்யா லட்சுமி காரியக்ரம் முன்மொழியப்பட்டுள்ளது. அனைத்து ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மாணவர்களும் தங்களுக்கு விருப்பமான உயர் கல்வியை எந்தவொரு நிதிக் கட்டுப்பாடும் இன்றி தொடர வழங்கப்படும் உதவித்தொகை மற்றும் கல்வி கடன் திட்டங்களை பிரதான் மந்திரி வித்யா லட்சுமி காரியக்ரம் நிர்வகிக்கவும் கண்காணிக்கவும் செய்கிற்து. வித்யா லட்சுமி வித்யா லட்சுமி போர்ட்டல் கல்வி கடன் பெற விரும்பும் மாணவர்களுக்கு தகவல்கள் அளிக்கும் முதல் போர்டல் ஆகும். இந்த ஒற்றை சாளர மின்னணு தளம் கல்வி கடன் மற்றும் அரசு உதவித்தொகைகளுக்கான தகவல்களையும் விண்ணப்பங்களையும் வழங்குகிறது. மேலும், கல்வி கடன் விண்ணப்பங்களை மாணவர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் பார்வையிடவும், விண்ணப்பிக்கவும் இந்த போர்டல் வழிவகுக்கிறது. தேசிய உதவித்தொகை போர்ட்டலுக்கான இணைப்புகளையும் வழங்குகிறது. இந்த போர்டல் நிதி சேவைகள் துறை (நிதி அமைச்சகம்), உயர்கல்வித் துறை (கல்வி அமைச்சகம்) மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் (ஐபிஏ) ஆகியவற்றின் வழிகாட்டுதலின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த போர்ட்டலை என்.எஸ்.டி.எல் இ-கவர்னன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் உருவாக்கி பராமரித்து வருகிறது. போர்ட்டலின் அம்சங்கள் வங்கிகளின் கல்வி கடன் திட்டம் பற்றிய தகவல்கள் மாணவர்களுக்கான ஒற்றை படிவ கல்வி கடன் விண்ணப்பம் கல்வி கடன்களுக்காக பல வங்கிகளுக்கு விண்ணப்பிக்கும் வசதி மாணவர்களின் கடன் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய வங்கிகளுக்கான வசதி கடன் விண்ணப்பித்தின் நிலையை பற்றி பதிவேற்ற வங்கிகளுக்கு வசதி கல்வி கடன்கள் தொடர்பான குறைகளை / கேள்விகளை வங்கிகளுக்கு மின்னஞ்சல் செய்வதற்கான வசதி அரசு உதவித்தொகைக்கான தகவல் மற்றும் விண்ணப்பத்திற்கான தேசிய உதவித்தொகை போர்ட்டலுடன் இணைப்பு கல்வி கடனுக்கு விண்ணப்பிப்பது எப்படி? வித்யா லட்சுமி மூலம் கல்வி கடனுக்கு விண்ணப்பிப்பது எப்படி? விண்ணப்பதாரர் வித்யா லட்சுமி போர்ட்டலில் பதிவு செய்து தேவையான அனைத்து விவரங்களையும் அளித்து ஒற்றை படிவ கல்வி கடன் விண்ணப்பத்தை (CELAF) நிரப்ப வேண்டும். படிவத்தை பூர்த்தி செய்த பின்னர், விண்ணப்பதாரர் தனது தேவைகள், தகுதி மற்றும் வசதிக்கு ஏற்ப கல்வி கடன் மற்றும் விண்ணப்பத்தை தேடலாம். பொதுவான கல்வி கடன் விண்ணப்ப படிவம் (CELAF) என்றால் என்ன? பொதுவான கல்வி கடன் விண்ணப்ப படிவம் என்பது பல வங்கிகள் / திட்டங்களுக்கு கல்வி கடனுக்காக விண்ணப்பிக்க மாணவர்கள் நிரப்பக்கூடிய ஒற்றை படிவமாகும். CELAF என்பது இந்திய வங்கிகள் சங்கம் (IBA) பரிந்துரைத்த விண்ணப்ப படிவம் மற்றும் அனைத்து வங்கிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கல்வி படிவத்திற்கு விண்ணப்பிக்க இந்த படிவம் வித்யா லட்சுமி போர்ட்டலில் வழங்கப்பட்டுள்ளது. கல்வி கடனுக்கான எத்தனை விண்ணப்பங்களை ஒரு மாணவர் சமர்ப்பிக்க முடியும்? ஒரு மாணவர் CELAF ஐப் பயன்படுத்தி வித்யா லட்சுமி போர்ட்டல் மூலம் அதிகபட்சம் மூன்று வங்கிகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஒரு விண்ணப்பதாரர் தனது விண்ணப்பத்தின் நிலையை எவ்வாறு அறிந்து கொள்வார்? வித்யா லட்சுமி போர்ட்டலில் விண்ணப்பத்தின் நிலையை வங்கி புதுப்பிக்கும். விண்ணப்பதாரரின் டாஷ்போர்டில் போர்ட்டலில் மாணவர்கள் விண்ணப்பத்தின் நிலையைக் காணலாம். பணம் / கல்வி கடன் எவ்வாறு வழங்கப்படுகிறது? ஒரு விண்ணப்பதாரரின் அங்கீகரிக்கப்பட்ட கல்வி கடன் வித்யா லட்சுமி போர்ட்டலுக்கு வெளியே வங்கியால் நேரடியாக வழங்கப்படும். ஆதாரம்: வித்யா லட்சுமி போர்டல்