தேசிய ஆசிரியர் நல நிதி நிறுவனம் ஆசிரியர்கள் நலனுக்காக 1962-இல் தேசிய ஆசிரியர் நல நிதி நிறுவனம் அமைக்கப்பட்டது. ஆசிரியர்களுக்கும் (மற்றும் அவர்களைச் சார்ந்த குடும்ப உறுப்பினர்களுக்கும்) தகுந்த சமயத்தில் தேவையான நிதி உதவி வழங்குவது இந்த நிறுவனத்தின் முக்கிய நோக்கமாகும். தொழிற்கல்வி படிப்பு உதவித்தொகை தமிழ்நாடு தேசிய ஆசிரியர் நல நிதியிலிருந்து தொழிற்கல்வி பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு தொழிற்கல்வி படிப்பு உதவித்தொகை வழங்கப்படுகிறது. தொழிற்கல்வி படிப்புகளான பொறியியல், மருத்துவம், வேளாண்மை, கால்நடை மருத்துவம் மற்றும் பல்துறை தொழில் நுட்பக் கல்லூரி பட்டயப் படிப்புகளுக்கு மட்டும் இந்த படிப்பு உதவித்தொகை வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள் விண்ணப்பிக்கும் ஆசிரியர்களின் மகன்/மகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள நிறுவனத்தில் அங்கீகரிக்கப்பட்ட நான்காண்டு தொழிற் கல்வி பட்டப்படிப்பு (4 Years Degree Courses) மற்றும் மூன்று ஆண்டு பட்டயப்படிப்பு (Diploma Courses) படிப்பவர்களாக இருத்தல் வேண்டும். மேலும் கல்வி உதவித்தொகை கோரவிருக்கும் ஆசிரியர்கள் குரைந்தபட்சம் பத்தாண்டுகள் பணியினை முழுமையாக முடித்திருக்க வேண்டும். இதற்கு முந்தைய அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். (சான்றளிக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ் நகல் இணைத்தல் வேண்டும்) மனுவில் உள்ள அனைத்து கலங்களும் முழுமையான அளவில் சரியாக தமிழில் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும். சரியாக பூர்த்தி செய்யப்படாத மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. (பணிபுரியும் பள்ளி, முகவரி பின் கோடுடன் இருத்தல் வேண்டும்) பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ. 720000-க்குள் (அடிப்படை ஊதியம் மட்டும்) இருத்தல் வேண்டும். தொழிற்கல்வி படிப்பில் கடைசியாக எழுதிய தேர்வில் தேர்ச்சி பெற்றமைக்கு ஆதாரமான மதிப்பெண் சான்றிதழ் நகல்கள் இன்றி பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். தந்தை அல்லது தாய் பணியின் விவரம் மற்றும் அவர்களின் ஊதிய சான்று விவரங்களை கண்டிப்பாக விண்ணப்பத்தில் உள்ள கலத்தில் பூர்த்தி செய்திருக்க வேண்டும். தந்தை அல்லது தாய் ஆசிரியராக பணிபுரிந்தால் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆசிரியரல்லாத பணியாளர்கள் விண்ணப்பிக்கக் கூடாது. ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் பிள்ளைகள் மற்றும் இறந்து போன ஆசிரியர்களின் பிள்ளைகள் ஆகியோர்களும் இப்படிப்பு உதவித்தொகை பெற தகுதியுள்ளவர்கள் ஆவார்கள். ஆதாரம்: தேசிய ஆசிரியர் நல நிதி நிறுவனம்