ஆதி திராவிடர் / பழங்குடியினர் / கிறுத்துவ மதம் மாறிய ஆதி திராவிட மாணவ மாணவிகள் ஆகியோர் படிப்பை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு வழங்கும் ஊக்கத் தொகை பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

ஊக்கத் தொகை

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆதி திராவிடர் / பழங்குடியினர் / கிறுத்துவ மதம் மாறிய ஆதி திராவிடர் ஆகிய ஒவ்வொரு பிரிவிலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் முதல் இரண்டு மாணவர்கள் மற்றும் இரண்டு மாணவியர்களுக்கு தமிழக அரசு ஊக்கத் தொகை வழங்கி வருகிறது.

தகுதிகள்

பத்தாம் வகுப்பிற்கு பிறகு படிப்பை தொடரும் பட்சத்தில், இந்த மாணவ மாணவிகளுக்கு முதல் ஆண்டுக்கு ரூ. 800 மற்றும் அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளுக்கு ஓராண்டிற்கு ரூ. 960 வீதமும் வழங்கப்பட்டு வருகிறது. வருமான வரம்பு ஏதுவும் இல்லை.

எப்படி பெறுவது?

இந்த மாணவ மாணவிகள் அவர்கள் பள்ளிகளின் மூலம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல இயக்குனரை தொடர்பு கொள்ளலாம்.

ஆதாரம்: தமிழ்நாடு அரசு