பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வழங்கும் சுவாமி விவேகானந்தா ஒற்றை பெண் குழந்தைக்கு சமூக அறிவியல் ஆய்வுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் மூலம் குடும்பத்தில் ஒற்றைப் பெண்ணாக இருக்கும் மாணவிகள் சமூக அறிவியல் ஆராய்ச்சி (Ph.D.) படிப்பை மேற்கொள்ளலாம். சுவாமி விவேகானந்தா ஒற்றை பெண் குழந்தைக்கு சமூக அறிவியல் ஆய்வுக்கு உதவித்தொகை கல்வி பயிலும் பல்வேறு காலகட்டங்களில் படிப்பை பாதியில் நிறுத்தி வெளியேறும் விகிதம் ஆண்களைக் காட்டிலும் பெண்களிடம் மிக அதிகமாகக் காணப்படுகிறது. எனவே, பெண்கள் கல்வியை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு, மாநில அரசு மற்றும் யுஜிசி ஆகியவை சிறப்புத் திட்டங்கள் வகுத்துள்ளன. ஒற்றைப் பெண் குழந்தை உள்ள குடும்பங்களுக்கு இந்திய அரசு சிறப்பு சலுகைகளை அளித்து வருகிறது. பெண்களுக்கு கல்வி மிகவும் இன்றியமையாதது என்பதை சுவாமி விவேகானந்தர் வலியுறுத்தியுள்ளார். இதன் அடிப்படையில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக, சமூக அறிவியல் ஆராய்ச்சி (Ph.D.) படிப்பை மேற்கொள்ளும் குடும்பத்தில் ஒற்றைப் பெண்ணாக இருக்கும் மாணவிகளுக்கு சுவாமி விவேகானந்தா பெல்லோஷிப் என்னும் திட்டத்தை யுஜிசி அறிமுகப்படுத்தியுள்ளது. மாணவிகளுக்குத் தேவையான உயர்கல்வியின் நேரடி செலவுகளை இத்திட்டம் ஈடுசெய்யும். சமூக அறிவியல் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் ஒற்றை பெண் குழந்தைகளை ஊக்குவித்தல் மற்றும் சிறுகுடும்ப நெறியை கடைப்பிடித்து பின்பற்றுபவர்களை அங்கீகரித்தல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும். விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள் இந்திய பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / நிறுவனங்களில் சமூக அறிவியல் ஆராய்ச்சி (Ph.D.) படிப்பை மேற்கொள்ளும் குடும்பத்தில் ஒற்றைப் பெண்ணாக இருக்கும் மாணவிகள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர். ஒரு குடும்பத்தில் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருந்தால், இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கத் தகுதியில்லை. விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் போது, ஒற்றை பெண் குழந்தை என்பதற்கான உறுதிமொழி பத்திரத்தை ரூ. 50 மதிப்புள்ள முத்திரைத் தாளில் தகுதியான அதிகாரியின் (எஸ்.டி.எம் / முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் / கெஜட்டட் அதிகாரி (தாசில்தார் தரத்திற்கு கீழே இல்லை) கையொப்பம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். கீழே குறிப்பிடப்பட்டுள்ளபடி இந்திய பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / நிறுவனங்களில் சமூக அறிவியலில் முழு நேர ஆராய்ச்சி படிப்பில் (Ph.D.) பதிவு செய்துள்ள ஒற்றை பெண் குழந்தைக்கு இத்திட்டம் பொருந்தும்: யுஜிசி சட்டம், 1956 இன் பிரிவு 2 (f) மற்றும் 12 (b) இன் கீழ் சேர்க்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / நிறுவனங்கள். யுஜிசி சட்டம் 1956 இன் பிரிவு 3 இன் கீழ் பல்கலைக்கழகங்கள் (Deemed to be Universities) யுஜிசி மானியம் பெற தகுதியுடையவை. மத்திய / மாநில அரசு நிதியுதவி பெறும் பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / நிறுவனங்கள். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள். தொலைதூர கல்வி வாயிலாக சமூக அறிவியலில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டுள்ளவர்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க முடியாது குடும்பத்தில் ஒற்றைப் பெண்ணாக இருக்கும் பொதுப் பிரிவைச் சார்ந்தவர்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் கடைசி தேதியின்படி 40 வயது வரையிலும், ஒதுக்கப்பட்ட பிரிவைச் சார்ந்தவர்கள் (எஸ்சி / எஸ்டி / ஓபிசி / மாற்றுத்திறனாளிகள்) விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் கடைசி தேதியின்படி 45 வயது வரையிலும் இருக்க வேண்டும். இத்திட்டத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தகுதியான திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம். உதவித்தொகை ஒவ்வொறு வருடமும் ஆன்லைனில் பெறப்படும் தகுதி வாய்ந்த விண்ணப்பங்களைப் பொறுத்து உதவித்தொகை எண்ணிக்கை தீர்மானிக்கப்படும். உதவித்தொகை (Fellowship) முதல் இரண்டு வருடங்களுக்கு ரூ. 25000 / மாதம் மீதமுள்ள ஆராய்ச்சி காலத்திற்கு ரூ. 28000 / மாதம் கண்டின்ஜென்சி (Contingency) முதல் இரண்டு வருடங்களுக்கு ரூ. 10000 / வருடம் மீதமுள்ள ஆராய்ச்சி காலத்திற்கு ரூ. 20500 / வருடம் எஸ்கார்ட்ஸ் / ரீடர் உதவி (Escorts / Reader Assistance) மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 2000 / மாதம் இத்திட்டம் பற்றிய கூடுதல் தகவல்களை அறிய பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) இணையதளத்தைப் பார்க்கவும். ஆதாரம்: பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி)