பவுண்டேஷன் ஃபார் அகடெமிக் எக்சலென்ஸ் அண்ட் ஆக்செஸ் (எஃப்.எ.இ.எ.) [Foundation for Academic Excellence and Access (FAEA)] வழங்கும் கல்வி உதவித் தொகை பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. எஃப்.எ.இ.எ. (FAEA) கல்வி உதவித் தொகை டாடா குழுமம் மற்றும் பிற நன்கொடையாளர்கள் இணைந்து பவுண்டேஷன் ஃபார் அகடெமிக் எக்சலென்ஸ் அண்ட் ஆக்செஸ் (எஃப்.எ.இ.எ.) என்ற அறக்கட்டளை மூலம் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறார்கள். பள்ளியில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று கலை / வணிகம் / அறிவியில் / பொறியியல் / இதர தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி இளநிலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு எஃப்.எ.இ.எ. (FAEA) கல்வி உதவித் தொகை வழங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் 230 மாணவர்கள் உதவித் தொகை பெற தேர்வு செய்யப்படுகிறார்கள். விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் பள்ளியில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது முதலாமாண்டு இளநிலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ மாணவியர்கள் இந்த உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம். சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவ மாணவியர்கள் (SC/ST/BPL Category) இந்த உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம். கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, தமிழ் நாடு ஆகிய மாநிலங்களில் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவிகளுக்கு சிறப்பு உதவித் தொகை வழங்கப்படுகிறது. மேலும், 12 ஆம் வகுப்பில் 90% மதிப்பெண்கள் பெற்ற (மற்றும் / அல்லது) இந்தியாவின் உயர்தர சிறப்புக் கல்வி நிறுவனங்களில் படிக்க இடம் கிடைத்த பொது பிரிவு மாணவ மாணவியர்களுக்கு தேவை மற்றும் தகுதி அடிப்படையில் நிதியுதவி வழங்கப்படுகிறது. நிதியுதவி கல்விக் கட்டணம், பராமரிப்பு கொடுப்பனவு (maintenance