இந்திய நர்சிங் கவுன்சில் (ஐஎன்சி) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

இந்திய நர்சிங் கவுன்சில் (ஐஎன்சி)

1947-ஆம் ஆண்டு இந்திய நர்சிங் கவுன்சில் சட்டத்தின் கீழ் இந்திய நர்சிங் கவுன்சில் தொடங்கப்பட்டது.

நர்சுகள் பயிற்சிக்கான தரத்தை நிர்ணயம் செய்வதுடன் நர்சிங் பயிற்சி கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான விதிமுறைகளை வகுப்பதும் கல்வித் திட்டங்களைப் பரிந்துரைப்பதும் இந்தக் கவுன்சிலின் பணிகளாகும்.

பயிற்சி பெற்ற நர்சுகள் நர்சிங் கவுன்சிலில் தங்களை உறுப்பினர்களாகப் பதிவு செய்து கொள்ள வேண்டியது அவசியம் புதிதாக நர்சிங் கல்வி நிறுவனங்களைத் தொடங்க வேண்டுமானால், நர்சிங் கவுன்சிலிடம் ஆட்சேபணை இல்லைச் சான்றிதழைப் பெற வேண்டியது அவசியம்.

மேலும் விவரங்களுக்கு www.indiannursingcouncil.org