இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ.) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ.)

மருத்துவக் கல்வியில் தரத்தை பேணுவதற்கும் மருத்துவப் படிப்புகளுக்கு அங்கீகாரம் அளிப்பதற்கும் உதவும் வகையில் இந்திய மருத்துவக் கவுன்சில் 1934-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

மருத்துவக் கல்வி நிறுவனங்களைத் தொடங்குவதற்கு இந்திய மருத்துவக் கவுன்சிலின் அனுமதி தேவை. அதேபோல, மருத்துவப் படிப்பை முடித்தவர்கள் மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்த பிறகே மருத்துவர்களாக பணிபுரிய முடியும்.

வெளிநாடுகளில் மருத்துவப் பட்டம் பெற்றவர்கள் நமது நாட்டில் மருத்துவர்களாகப் பணிபுரிவதற்கு இந்திய மருத்துவக் கவுன்சிலின் அங்கீகாரம் தேவை.

மேலும் விவரங்களுக்கு www.mciindia.org