கவுன்சில் ஆஃப் ஆர்க்கிடெக்சர் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

கவுன்சில் ஆஃப் ஆர்க்கிடெக்சர்

1972 -ஆண்டு நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் ஆர்க்கிடெக்சர் கவுன்சில் (சி.ஓ.ஏ.) தொடங்கப்பட்டடது. கட்டடக்கலைப் பட்டப் படிப்பு படித்த யாரும் இந்தக் கவுன்சிலில் உறுப்பினராகப் பதிவு பெற்ற பிறகே, அத்துறையில் பணியைச் செய்ய முடியும். கட்டடக்கலைக் கல்வியின் தரத்தை நிர்ணயித்து அதை ஒழுங்குபடுத்தும் பொறுப்பும் இந்த அமைப்புக்கே உள்ளது.

பல்வேறு கல்வி நிறுவனங்கள் நடத்தும் ஆர்க்கிடெக்சர் படிப்புகளை அங்கீகரிப்பதும் இந்த அமைப்புதான் என்பது குறிப்பிடத்தக்கது. கட்டடக்கலைப் பட்டப் படிப்பில் சேருவதற்கு ஆர்க்கிடெக்சர் கவுன்சில் நடத்தும் திறனறித் தேர்வை கட்டாயம் எழுதியிருக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு www.coa.gov.in