மத்திய ஹோமியோபதி கவுன்சில் (சிசிஎச்) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

மத்திய ஹோமியோபதி கவுன்சில் (சிசிஎச்)

ஹோமியோபதி மத்திய கவுன்சில் சட்டத்தின் கீழ் மத்திய ஹோமியோபதி கவுன்சில் (சென்ட்ரல் கவுன்சில் ஆஃப் ஹோமியோபதி) 1973-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.

ஹோமியோபதி மருத்துவக் கல்வித் தரத்தை நிர்ணயம் செய்வதும் அங்கீரிப்பதும் இதன் பணி. எந்தப் பல்கலைக்கழகமோ அல்லது மருத்துவக் கல்வி நிறுவனமோ ஹோமியோபதி மருத்துவப் படிப்பைத் தொடங்க வேண்டுமானால் மத்திய ஹோமியோபதி கவுன்சிலிடம் அங்கீகாரம் பெற விண்ணப்பிக்க வேண்டும்.

ஹோமியோபதி பட்டம் பெற்ற மருத்துவர்கள் இந்தக் கவுன்சிலில் தங்களை ஹோமியோபதி மருத்துவர்களாகப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு www.cchindia.com