தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் பற்றி இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. நோக்கங்கள் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழகம், தமிழ்நாடு அரசால், 2002-ம் ஆண்டைய (2002-ம் 27-வது சட்டம்) தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழகச் சட்டத்தின்படி, 2002-ம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, இப்பல்கலைக் கழகம், சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு, இந்தியா மற்றும் உலகமெங்கும் தனது கல்வி மேம்பாட்டிற்கான செயல்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. வேலை வாய்ப்புக்களுக்கான தேவைகளுடன், மாநில மற்றும் தேசத்தின் பொருளாதார அத்தியாவசியத்தையொட்டி, பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு மற்றும் சான்றிதழ் பயிற்சி வகுப்புகளை வளப்படுத்துவதோடு, வகைப்படுத்தவும். மக்கட் தொகையின் பெரும் பிரிவினருக்கு உயர் கல்வியை வெகு எளிதில் கிட்டும் வகையில் வழங்கிடவும், அதிலும் குறிப்பாக, கண்ணுக்கெட்டாத தொலைதூரத்து மற்றும் கிராமப்புறங்களில் வாழும் தொழிலாளர்கள், இல்லத்தரசிகள், முதியோர்கள் போன்ற அனுகூலங்களைக் கண்டறியாப் பிரிவினர்களுக்கு பல்வேறு தளங்களில் உள்ள படிப்புகளின் மூலம் கல்வியறிவைப் பெறவும் அல்லது வளர்த்துக் கொள்ளவும், வழிகாட்டி நிற்பதோடு வழங்கிடவும். கல்வியறிவைப் பெறுவதற்குத் துணை நிற்பதோடு, மனித இனம் முயலும் அனைத்துத் தளங்களிலுமான புதுமை முயற்சி, ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு போன்றவற்றில் முனைப்புக் காட்டிட ஏதுவாக, கல்வியறிவுப் பயிற்சி மற்றும் திறமைகளைத் தொடர்ந்து தடையின்றி வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புக்களை உருவாக்கித் தரவும். கல்வி வாய்ப்புக்களை விரிவாக்கிடவும், கல்வி வரம்பை ஆழப்படுத்திடவும், நிர்வாகத்திற்கான அறிவாற்றல் திறனை உருவாக்கிட ஏதுவாக்கிட, எளிதான, இணக்கமான மற்றும் வலுவான பாடத் திட்டங்களை உருவாக்கிடவும். மரபார்ந்த கல்வித் திட்டத்தை நிறைவாக்கும் வகையில், பள்ளி சாராக் கல்வித் திட்டமுறையினை வழங்கிடவும் மற்றும் தகுதி அளவெண் பலன்களை மாற்றிக் கொள்ள ஏதூவக உரிய வழிவகைகள் காட்டிடவும். பலதரப்பட்ட கைவினைப் பொருட்களுக்குரிய கல்வியையும், பயிற்சியையும் அளித்திடவும். ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கிடவும். பல்கலைக்கழகம் 2002-ம் ஆண்டைய தமிழ்நாடு திறந்தவெளிப் பல்கலைக்கழகச் சட்ட வழிகாட்டுதலின்படி, தொலைதூரக் கல்வித் திட்டத்தின் கீழ் செயல்முறை மற்றும் தொழில் முறையிலான பலதரப்பட்ட கல்வித் திட்டங்களை நடத்த உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பல்கலைக் கழகம் தற்போது அளித்து வரும் திட்டங்கள் பின்வருமாறு: வ.எ. திட்ட விபரங்கள் மொத்தத்திட்டங்கள் (பயிற்று மொழி வாரியாக) ஆங்கிலம் தமிழ் ஆங்கிலமும் தமிழும் உருது 1 முதுகலைப் பட்டப் படிப்புத் திட்டங்கள் எம்.பி.ஏ / எம்.சி.ஏ. உட்பட 11 1 7 - 2 இளங்கலைப் பட்ப் படிப்புத் திட்டங்கள் 13 3 15 1 3 முதுகலைப் பட்டயப் படிப்புத் திட்டங்கள் 13 1 - - 4 பட்டயப் படிப்புத்திட்டங்கள் 5 1 - - 5 சான்றிதழ் படிப்புத்திட்டங்கள் 4 2 1 - 6 தொழிற் கல்வித் திட்டங்கள்: அ. இளங்கலைப் பட்டத் திட்டங்கள். ஆ. பட்டயப் படிப்புத் திட்டங்கள். இ.முதிர்ச்சியுற்ற பட்டயப் படிப்புத் திட்டங்கள் 1 6 1 - 6 5 - 5 - - - - 7 ஆசிரியர் பயிற்சி அ. பி.எட். (முறையான) ஆ. பி.எட். சிறப்புக் கல்வி - - - - 1 1 - - உணவு விடுதி நிர்வாகம் மற்றும் சமையற்கலை ஆகிய திட்டப் பாடங்கள் கல்வியாண்டு சுழற்சி முறையின் கீழ் மட்டுமே நடத்தப்படுகின்றன. தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் யாவும் பின்வரும் சட்டப்பூர்வமான அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன பல்கலைக்கழக மானியக் குழு தொலைதூரக் கல்விக் கவுன்சில் ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் இந்திய சீரமைப்புக் கவுன்சில் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழகம் பின்வரும் அமைப்புகளில் உறுப்பினராக அங்கம் வகிக்கிறது இந்திய பல்கலைக் கழகங்களின் சங்கம் திறந்த நிலைப் பல்கலைக் கழகங்களின் ஆசியக் கழகம். திறந்த நிலை மற்றும் தொலைதூரக் கல்விக்கான சர்வதேச கவுன்சில். இந்திய திறந்த நிலைப் பல்கலைக்கழகங்களின் சங்கம். கல்விச் செயல்பாடுகள் படிப்புகளுக்கான பள்ளிகள் பல்வேறு பாடத்துறைகளை ஒருங்கினைத்திடவும் படிப்புத் திட்டங்களை உருவாக்கிடவும் பல்கலைக்கழகம் பின்வரும் பள்ளிகளைத் தோற்றுவித்துள்ளது. மேலாண்மைப் பள்ளி தொடர் கல்விக்கான பள்ளி கல்வியியல் பள்ளி இலக்கிய பாடங்களுக்கான பள்ளி அறிவியல் பள்ளி கணினி அறிவியல் பள்ளி சமூக அறிவியல் பள்ளி சுகாதார அறிவியல் பள்ளி தமிழ் கலாச்சார மற்றும் கல்வி பள்ளி அரசியல் மற்றும் பொது நிர்வாகவியல் பள்ளி இதழியல் மற்றும் புதிய ஊடகவியல் பள்ளி கல்விப் படிப்புத் திட்டங்கள் பல்கலைக்கழகம், சான்றிதழ்கள், பட்டயங்கள், முதுகலைப் பட்டப் பட்டயங்கள், இளங்கலைப் பட்டங்கள், முதுகலைப் பட்டங்கள் ஆகியவ்றிற்குக் குறுகிய காலம் மற்றும் நீண்டகாலப் படிப்புத் திட்டங்களை அளித்து வருகின்றது. அவைகள் தொடங்கப்பட்டதன் நோக்கமே, கற்போர்களின் தேவைகளை நிறைவு செய்வதற்காகத்தான், அவைகள், சான்றளித்தல் திறமைகளை வளர்த்துக் கொள்ளல் வேலைக்கான தகுதியினை உருவாக்கிக் கொள்ளல் பயிணிடங்களில், கல்வியையும் தொழிலார்ந்த வளர்ச்சியைத் தொடர்ந்து மேற்கொள்ளல், சுயமான கற்றல் அனுபவத்தினை பெறுதல், கல்வியறிவை பல்வகைப்படுத்துதல். முதுகலைப் பட்ட பாடத்திட்டங்கள் பாடத்திட்டப் பெயர்: எம்.பி.ஏ கல்வித் தகுதி: ஏதேனுமொரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்திலிருந்து பெற்பபட்ட இளநிலைப் பட்டம். பயிற்று மொழி: ஆங்கிலம் பாடத்திட்டப் பெயர்: எம்.சி.ஏ கல்வித் தகுதி: ஏதேனுமொரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்திலிருந்து பெற்பபட்ட இளநிலைப் பட்டம். பயிற்று மொழி: ஆங்கிலம் பாடத்திட்டப் பெயர்: எம்.சி.ஏ(எல்.இ.) கல்வித் தகுதி: ஏதேனுமொரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்திலிருந்து பெற்பட்ட பி.ஜி.டி.சி.ஏ/ அல்லது சமமான படிப்பு/ பி.எஸ்.சி. (கம்ப்யூட்டர் சயின்ஸ்/ பி.சி.ஏ. / அல்லது பி.இ./ பி.டெக். (கம்ப்யூட்டர் சயின்ஸ்) / கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் பட்டம். பயிற்று மொழி: ஆங்கிலம் பாடத்திட்டப் பெயர்: எம்.ஏ (வரலாறு/ பொது நிர்வாகஇயல்/ சமூகவியல்/ அரசியல் அறிவியல்/ பொருளாதாரம்/ சமூகப்பணி) கல்வித் தகுதி: ஏதேனுமொரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்திலிருந்து பெற்பட்ட இளநிலை பட்டம். பயிற்று மொழி: தமிழ் & ஆங்கிலம் பாடத்திட்டப் பெயர்: எம்.ஏ (தமிழ்) கல்வித் தகுதி: தமிழ் மொழி பாடத்துடன் ஏதேனுமொரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்திலிருந்து பெற்பட்ட இளநிலை பட்டம். பயிற்று மொழி: தமிழ் பாடத்திட்டப் பெயர்: எம்.ஏ (ஆங்கிலம் / சுற்றுலாவியல் / குற்றவியல் மற்றும் குற்றம் சார் நீதி நிர்வாகம்) கல்வித் தகுதி: ஏதேனுமொரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்திலிருந்து பெற்பட்ட இளநிலை பட்டம். பயிற்று மொழி: ஆங்கிலம் பாடத்திட்டப் பெயர்: எம்.காம் கல்வித் தகுதி: வணிகவியலில் இளங்கலை பட்டம் / பிசினஸ் அட்மின் / கார்ப். செக். / ஏ.சி.ஏ / ஏ.ஐ.சி.டபிள்யூ / ஏ.சி.எஸ். மற்ற பாடத்தில் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் அந்தப் படிப்பில் குறைந்தது 2 தாள்களில் வணிகவியல் படித்திருக்க வேண்டும். பயிற்று மொழி: தமிழ் & ஆங்கிலம் பாடத்திட்டப் பெயர்: எம்.எஸ்.சி. (உளவியல் / கணிதம்) கல்வித் தகுதி: ஏதேனுமொரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்திலிருந்து பெற்பட்ட இளநிலை பட்டம். பயிற்று மொழி: ஆங்கிலம் பாடத்திட்டப் பெயர்: எம்.எஸ்.சி (ஆற்றுப்படுத்துதல் மற்றும் உளசிகிச்சை) கல்வித் தகுதி: (அ) பி.எஸ்சி் உளவியியல் உளசிகிச்சையியல் பட்டம் (அல்லது) (ஆ) உளவியியலில் பட்டம் பெறாத பட்டதாரிகள் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து எம்.பி.பி. முடிக்க வேண்டும். பயிற்று மொழி: ஆங்கிலம் பாடத்திட்டப் பெயர்: எம்.எஸ்.சி (ஆற்றுப்படுத்துதல் மற்றும் உளசிகிச்சை) (எல்.இ.) கல்வித் தகுதி: தமிழ்நாடு திற்நதநிலைப் பல்கலைக்கழகத்தில் உளவியல் ஆற்றுப்படுத்துதலில் முதுநிலை பட்டயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்று மொழி: ஆங்கிலம் இளநிலைப் பட்ட பாடத்திட்டங்கள் பாடத்திட்டப் பெயர்: பி.ஏ. (தமிழ் / இலக்கியம் (பி.லிட்.) /பயன்முறைத் தமிழ்) கல்வித் தகுதி: +2 (HSC) அல்லது அதற்கு சமமான கல்வி (அல்லது) TNOU-BPP. பயிற்று மொழி: தமிழ் பாடத்திட்டப் பெயர்: பி.ஏ. (உருது) கல்வித் தகுதி: +2 (HSC) அல்லது அதற்கு சமமான கல்வி (அல்லது) TNOU-BPP. பயிற்று மொழி: உருது பாடத்திட்டப் பெயர்: பி.ஏ. (ஆங்கிலம் /ஆங்கிலம் மற்றும் கம்யூனிகேசன்) கல்வித் தகுதி: +2 (HSC) அல்லது அதற்கு சமமான கல்வி (அல்லது) TNOU-BPP. பயிற்று மொழி: ஆங்கிலம் பாடத்திட்டப் பெயர்: பி.ஏ. (வரலாறு / குற்றவியல் குற்றம் சார் நீதி நிர்வாகம் / வரலாறு மற்றும் பாரம்பரிய மேலாண்மை / சுற்றுலாவியல் /பொருளாதாரம் / வணிக பொருளாதாரம் / பொது நிர்வாக இயல் / அரசியல் அறிவியல் / சமூகவியல் / சமூகப் பணி) கல்வித் தகுதி: +2 (HSC) அல்லது அதற்கு சமமான கல்வி (அல்லது) TNOU-BPP. பயிற்று மொழி: தமிழ் & ஆங்கிலம் பாடத்திட்டப் பெயர்: பி.காம் கல்வித் தகுதி: +2 (HSC) அல்லது அதற்கு சமமான கல்வி (அல்லது) TNOU-BPP. பயிற்று மொழி: தமிழ் & ஆங்கிலம் பாடத்திட்டப் பெயர்: பி.காம் (வங்கி மேலாண்மை / நிறுமச் செயலாண்மை / கணக்கியலும் நிதியியலும்) கல்வித் தகுதி: +2 (HSC) அல்லது அதற்கு சமமான கல்வி (அல்லது) TNOU-BPP. பயிற்று மொழி: தமிழ் & ஆங்கிலம் பாடத்திட்டப் பெயர்: பி.காம் (கணினி பயன்பாடு) கல்வித் தகுதி: +2 (HSC) அல்லது அதற்கு சமமான கல்வி (அல்லது) TNOU-BPP. பயிற்று மொழி: ஆங்கிலம் பாடத்திட்டப் பெயர்: பி.பி.ஏ கல்வித் தகுதி: +2 (HSC) அல்லது அதற்கு சமமான கல்வி (அல்லது) TNOU-BPP. பயிற்று மொழி: தமிழ் & ஆங்கிலம் பாடத்திட்டப் பெயர்: பி.பி.ஏ. ( கணினி பயன்பாடு / சில்லரை வியாபார மேலாண்மை) கல்வித் தகுதி: +2 (HSC) அல்லது அதற்கு சமமான கல்வி (அல்லது) TNOU-BPP. பயிற்று மொழி: ஆங்கிலம் பாடத்திட்டப் பெயர்: பி.எஸ்.சி. (கணிதம் / கணிதம் மற்றும் கணினி பயன்பாடு / உளவியல் / கணினி அறிவியல்) கல்வித் தகுதி: +2 (HSC) அல்லது அதற்கு சமமான கல்வி (அல்லது) TNOU-BPP. பயிற்று மொழி: ஆங்கிலம் பாடத்திட்டப் பெயர்: பி.எஸ்.சி. (புவியியல்) கல்வித் தகுதி: +2 (HSC) அல்லது அதற்கு சமமான கல்வி (அல்லது) TNOU-BPP. பயிற்று மொழி: ஆங்கிலம் பாடத்திட்டப் பெயர்: பி.சி.ஏ. கல்வித் தகுதி: +2 (HSC) அல்லது அதற்கு சமமான கல்வி (அல்லது) TNOU-BPP. பயிற்று மொழி: ஆங்கிலம் பாடத்திட்டப் பெயர்: பி.சி.ஏ. (எஸ்.இ.) கல்வித் தகுதி: +2 (HSC) முடித்து அங்கீகரிக்கப்பட்ட தொழில் நுட்பக்கல்லூரியில் இன்பர்மேஷன் டெக் / கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் டிப்ளமோ பிரிவில் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேர்க்கை பெற்ற மாணவர்கள் மட்டும். பயிற்று மொழி: ஆங்கிலம் பாடத்திட்டப் பெயர்: பி.சி.ஏ. (எல்.இ.) கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட தொழில் நுட்பக்கல்லூரியிலிருந்து பெறப்பட்ட பட்டயம். பயிற்று மொழி: ஆங்கிலம் முதுகலை பட்டயப் பாடத்திட்டங்கள் பாடத்திட்டப் பெயர்: முதுநிலை பட்டயம் தமிழ் ஆய்வு நெறிமுறைகள் கல்வித் தகுதி: தமிழ் முதுநிலைப் பட்டம் பயிற்று மொழி: தமிழ் பாடத்திட்டப் பெயர்: கணினி பயன்பாட்டில் முதுநிலை பட்டயம் / முதுநிலை பட்டயம் தகவல் தொழில் நுட்ப மேலாண்மை / முதுநிலை பட்டயம் மென்பொருள் தர மேலாண்மை / முதுநிலை பட்டயம் தகவல் பாதுகாப்பு / முதுநிலை பட்டயம் ஆங்கில பேச்சு வழக்கியல் / முதுநிலை பட்டயம் பொது நிர்வாக இயல் / முதுநிலை பட்டயம் மக்கள் தொடர்பியல் / முதுநிலை பட்டயம் ஊரக மேம்பாட்டு நிர்வாகம் / முதுநிலை பட்டயம் மனித உரிமைகள் / முதுநிலை பட்டயம் சுற்றுசூழல் மற்றும் வளங்குன்றா மேம்பாடு / முதுநிலை பட்டயம் அறிவுசார் சொத்துரிமைகள் / முதுநிலை பட்டயம் பேரிடர் மேலாண்மை கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்திலிருந்து பெற்பட்ட இளங்கலை பட்டம். பயிற்று மொழி: ஆங்கிலம் பாடத்திட்டப் பெயர்: முதுநிலை பட்டயம் உளவியல் ஆற்றுப்படுத்துதல் கல்வித் தகுதி: (அ) ஏதேனுமொரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்திலிருந்து பெற்பட்ட பி.ஏ. (அல்லது) பி.எஸ்.சி. (உளவியல்). (ஆ) உளவியியலில் பட்டம் பெறாத பட்டதாரிகள் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து எம்.பி.பி. முடிக்க வேண்டும். பயிற்று மொழி: ஆங்கிலம் பட்டயப் பாடத்திட்டங்கள் பாடத்திட்டப் பெயர்: ஊடகக்கலை பட்டயம் கல்வித் தகுதி: +2 (HSC) அல்லது அதற்கு சமமான கல்வி (அல்லது) TNOU-BPP. பயிற்று மொழி: தமிழ் பாடத்திட்டப் பெயர்: பட்டயம் மேலாண்மை கல்வித் தகுதி: பட்டபடிப்பு (அல்லது) 10+2 உடன் மற்றும் 3 வருடங்கள் கண்காணிப்பு / மேலாண்மை / தொழில் அனுபவம். பயிற்று மொழி: ஆங்கிலம் பாடத்திட்டப் பெயர்: விவரத் தொகுப்புகள் பட்டயம் கல்வித் தகுதி: +2 (HSC) அல்லது அதற்கு சமமான கல்வி (அல்லது) TNOU-BPP. பயிற்று மொழி: ஆங்கிலம் சான்றிதழ் பாடத்திட்டங்கள் பாடத்திட்டப் பெயர்: சுற்றுப்புற சூழ்நிலைக் கல்வி சான்றிதழ் கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பயிற்று மொழி: ஆங்கிலம் பாடத்திட்டப் பெயர்: உணவு மற்றும் ஊட்டம் கல்வித் தகுதி: முறையான கல்வித் தகுதி தேவையில்லை பயிற்று மொழி: தமிழ் & ஆங்கிலம் பாடத்திட்டப் பெயர்: கிராமப்புற வளர்ச்சியில் சான்றிதழ் கல்வித் தகுதி: இளங்கலைப் பட்டம் பயிற்று மொழி: ஆங்கிலம் பாடத்திட்டப் பெயர்: ஆங்கிலம் கற்பித்தல் கல்வித் தகுதி: +2 (HSC) அல்லது அதற்கு சமமான கல்வி பயிற்று மொழி: ஆங்கிலம் பாடத்திட்டப் பெயர்: தொடக்கப்பள்ளி கணிதம் கற்பித்தல் சான்றிதழ் கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, மழலையர் / தொடக்க ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் பயிற்று மொழி: ஆங்கிலம் பாடத்திட்டப் பெயர்: சுய உதவிக் குழுக்கள் மூலம் மகளிர்களுக்கு அதிகாரம் அளித்தல் சான்றிதழ் கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் பயிற்று மொழி : தமிழ் பாடத்திட்டப் பெயர்: தொண்டு நிறுவனம் மெலாண்மை சான்றிதழ் கல்வித் தகுதி: (அ) +2 (HSC) அல்லது அதற்கு சமமான கல்வி (ஆ) 3 வருடங்கள் தொண்டு நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவத்துடன் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பயிற்று மொழி: தமிழ் சமையற்கலை மற்றும் உணவு விடுதி நிர்வாக பாடங்கள் (இந்த பாடத்திட்டங்கள் கல்வியாண்டு செர்க்கையில் மட்டுதான் வழங்கப்படும்) பாடத்திட்டப் பெயர்: உணவு தயாரித்தலில் பட்டய படிப்பு / உணவு பரிமாறலில் பட்டய படிப்பு / அடுமனை மற்றும் மிட்டாய் தயாரித்தல் கல்வித் தகுதி: 10 ம் வகுப்பு தேர்ச்சி பயிற்று மொழி: ஆங்கிலம் பாடத்திட்டப் பெயர்: பி.எஸ்.சி. (சமையற்கலை மற்றும் உணவு விடுதி நிர்வாகம்) (பகுதி பயிற்சி) கல்வித் தகுதி: +2 (HSC) அல்லது அதற்கு சமமான கல்வி. பயிற்று மொழி: ஆங்கிலம் பாடத்திட்டப் பெயர்: பி.எஸ்சி் (சமையற்கலை மற்றும் உணவு விடுதி நிர்வாகம்) (For Ex-Diploma Holders –Distance Mode) கல்வித் தகுதி: உணவு விடுதி மேலாண்மை மற்றும் சமையற்கலை பட்டடய படிப்பை மத்திய அல்லது மாநில அரசின் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் பயின்றிருக்க வேண்டும். பயிற்று மொழி: ஆங்கிலம் பாடத்திட்டப் பெயர்: பி.எஸ்.சி. (சமையற்கலை மற்றும் உணவு விடுதி நிர்வாகம். பட்டய படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு மட்டும்). கல்வித் தகுதி: அகில இந்திய தொழில் நுட்ப கல்வி மாமன்றத்தின் அங்கீகாரம் மற்றும் நுட்ப கல்வி மாமன்றத்தின் அங்கீகாரம் மற்றும் தொழில் நுட்ப கல்வி இயக்கக அனுமதி பெற்ற ஏதாவது ஒரு கல்விநிலையத்தில் உணவு விடுதி மேலாண்மை மற்றும் சமையற்கலை பட்டய படிப்பு மாணவராக இருத்தல் வேண்டும். பயிற்று மொழி: ஆங்கிலம் சமுதாய கல்லூரிகளின் மூலம் நடத்தப்படும் தொழில் கல்வி பாடத்திட்டங்கள் பாடத்திட்டப் பெயர்: ரெப்ரிஜிரேஷன் மற்றும் ஏர்கன்டிஷன் டெக்னிசியன் பட்டயம் / நான்கு சக்கர வாகனம் பழுது பார்த்தலில் பட்டயம் / பிளம்பிங் டெக்னிசியன் பட்டயம் / கேட்டரிங் உதவியாளர் பட்டயம் / ஹவுஸ் எலக்ட்ரீசியன் பட்டயம் / வீட்டு உபயோகப் பொருட்கள் பழுது பார்த்தல் பட்டயம். கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது TNOU-PPS பயிற்று மொழி: தமிழ் பாடத்திட்டப் பெயர்: அலைபேசி பழுது பார்த்தல் பட்டயம் / கணினி ஹார்டுவேர் பழுதுபார்த்தல் பட்டயம் / அனிமேஷனில் பட்டயம் / மல்டிமீடியா பட்டயம். கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது TNOU-PPS பயிற்று மொழி: ஆங்கிலம். பாடத்திட்டப் பெயர்: ஆடைகள் வடிவமைத்தல் பட்டயம் / சுகாதார உதவியாளர் பட்டயம் / DTP ஆப்பரேட்டர் பட்டயம் / அழகுக்கலை நிபுணராவதற்கான பட்டயம் / கணினி பயன்பாட்டில் பட்டயம். கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது TNOU-PPS பயிற்று மொழி: தமிழ் & ஆங்கிலம். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் மேற்கண்ட தொழிற்கல்வி பாடத் திட்டத்தில் சேரலாம் ஆனால் அவர்கள் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக் கழகத்ததால் வழங்கப்படும் இடைநிலை ஆயத்த பாடத்தினையும் (PPS) மூடுதலாக அதே வருடத்தில் படிக்க வேண்டும். மேற்கண்ட தொழிற்கல்வி பாடத்திட்டத்தில் சேர எந்த கல்வித் தகுதியும் இல்லாதவர்கள் 1-7-2010 அன்று 15 வயது நரம்பியிருந்தால் சமுதாய கல்லூரியில் 6 மாத சான்றிதழ் படிப்பையும் அதன் பின்னர் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழத்தின் இடைநிலை ஆயத்த படிப்பையும் (PPS) முடித்திருக்க வேண்டும். .மேற்கண்ட தொழிற்கல்வி பாடத்திட்டத்தை முடித்தவர்கள் தமிழ்நாடு திற்நதநிலைப் பல்கலைக் கழகத்தின் மேல்நலை ஆயத்த பாட திட்டத்தில் (PPH) சேரலாம். இந்த மேல்நிலை ஆயத்த பாடத்திட்டத்தினை முடித்தவர்கள் தமிழ்நாடு திற்நத நிலைப் பல்கலைக் கழகத்தில் பட்ட படிப்பினை பயிலலாம். இதனை வேறு எதற்கும் பயன்படுத்த முடியாது. சமுதாய கல்லூரிகள் மூலம் நடத்தப்படும் தொழில் கல்வி பாடத்திட்டத்திற்கான தகவல் அறிக்கை பல்கலைக் கழகத்தால் தனியாக வெளியிடப் பட்டுள்ளது. தொழில் கல்வி பாடத்திட்டங்கள் பாடத்திட்டப் பெயர்: மலலையர் நலன் மற்றும் பராமரிப்பு கல்வியில் கட்டயம் கல்வித் தகுதி: +2 (HSC) தேர்ச்சி அல்லது TNOU-PPH பயிற்று மொழி: தமிழ் & ஆங்கிலம். பாடத்திட்டப் பெயர்: ஆயத்த ஆடை வடிவமைப்பில் பட்டயம் / ஆயத்த ஆடை வடிவமைப்பில் பட்டப்படிப்பு. கல்வித் தகுதி: +2 (HSC) தேர்ச்சி அல்லது TNOU-PPH பயிற்று மொழி: ஆங்கிலம். பாடத்திட்டப் பெயர்: ஆயத்த ஆடை வடிவமைப்பில் கூடுதல் பட்டயம் / ஆயத்த ஆடை வடிவமைப்பில் பட்டப்படிப்பு (நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கை) கல்வித் தகுதி: தொழில் நுட்பக்கல்லூரியில் மூன்று வருட ஆடை தொழில் தொழில் நுட்பத்தில் டிப்ளமோ முடித்தவர்கள் அல்லது TNOU-DAFD பயிற்று மொழி: ஆங்கிலம். 12-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் மேற்கண்ட தொழிற்கல்வி பாடத் திட்டத்தில் சேரலாம். ஆனால் அவர்கள் தமிழ்நாடு திற்நத நிலைப் பல்கலைக் கழகத்தால் வழங்கப்படும் மேல்நிலை ஆயத்த படிப்பினையும் (PPH) கூடுதலாக அதே வருடத்தில் படிக்க வேண்டும். தமிழ்நாடு திற்நத நிலைப் பல்கலைக் கழகத்தின் மேல்நிலை ஆயத்த பாட திட்டத்தை முடித்தவர்கள் தமிழ்நாடு திற்நத நிலைப் பல்கலைக் கழகத்தில் பட்டம் மற்றும் பட்டய பாடத்திட்டத்தில் சேரலாம். இந்த மேல்நிலை ஆயத்த பாடத்திட்டத்தினை முடித்தவர்கள் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைகழகத்தில் பட்ட படிப்பினை பயிலலாம். சமுதாய கல்லூரிகளின் மூலம் நடத்தப்படும் தொழில் கல்வி பாடத்திட்டத்திற்கான தகவல் அறிக்கை பல்கலைக் கழகத்ததால் தனியாக வெளியிடப்பட்டுள்ளது. ஆதாரம் : தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம்