இந்திய தரவரிசை 2025-ஐ மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஒட்டுமொத்த செயல்பாட்டு வகைமைக்கான தரவரிசையில் சென்னை ஐஐடி, தொடர்ந்து முதலிடத்தைப் பெற்றுள்ளது. அதே போல் பொறியியல் பிரிவில் இது முதலிடத்தைப் பெற்றுள்ளது. இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் (IISc) பெங்களூரு பல்கலைக்கழகம், ஆராய்ச்சி நிறுவனப் பிரிவில் முதலிடத்தையும், இந்திய மேலாண்மை நிறுவனம் அகமதாபாத், மேலாண்மை பிரிவில் முதலிடத்தையும் பெற்றுள்ளது. இந்தப் பட்டியலில் ஒட்டுமொத்த செயல்பாட்டு வகைமைக்கான தரவரிசை பின்வருமாறு மெட்ராஸ் ஐஐடி IISc பெங்களூரு ஐஐடி பாம்பே ஐஐடி டெல்லி ஐஐடி கான்பூர் ஐஐடி காரக்பூர் ஐஐடி ரூர்க்கி எய்ம்ஸ் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் வாரணாசி பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் பல்கலைக்கழகங்கள் பட்டியல் IISc பெங்களூரு நியூ டெல்லி ஜவர்ஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மணிப்பால் உயர்கல்வி நிறுவனம் ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழகம் டெல்லி பல்கலைக்கழகம் வாரணாசி பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் பிர்லா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆப் ஆப் டெக்னாலஜி & சயின்ஸ் - பிலானி கோவை அம்ருதா விஷ்வ வித்யாபீடம் கொல்கத்தா ஜதாவ்புர் பல்கலைக்கழகம் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகம், சென்னை அண்ணா பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகம், புதுச்சேரி ஜிப்மர், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் உட்பட தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 கல்வி நிறுவனங்கள் ஒட்டுமொத்த செயல்பாட்டு தரவரிசையில் இடம் பெற்றுள்ளன. ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்