தேசிய டிஜிடல் கல்வி கட்டமைப்பு தேசிய டிஜிடல் கல்வி கட்டமைப்பு (National Digital Education Architecture), மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் இணைந்து கல்வி அமைச்சகத்தின் கீழ் எடுக்கப்பட்டுள்ள ஒரு சிறந்த முயற்சியாகும். கல்விக்கான தொழில்நுட்பத்தை உருவாக்குதல், பயன்படுத்துதல் மற்றும் மறுபயன்பாடு செய்தல் ஆகியவற்றின் போது பின்பற்ற வேண்டிய பொதுவான கோட்பாடுகள் மற்றும் அணுகுமுறைகளை செயல்படுத்த தேசிய டிஜிடல் கல்வி கட்டமைப்பு வழிவகை செய்யும். தேசிய டிஜிடல் கல்வி கட்டமைப்பு மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், சமூகப்பிரிவுகள் மற்றும் நிர்வாகிகள் ஆகியோருக்கு பலவகைப்பட்ட, பொருத்தமான, சூழல்சார் மற்றும் புதுமையான தீர்வுகளை வழங்கி, கொள்கை இலக்குகளை சரியான நேரத்தில் செயல்படுத்துவதற்கு வழிவகை செய்யும். கல்வியில் உலகளாவிய முன்னோடி முயற்சியாகவும், கல்வியை வலுப்படுத்தவும் ஊக்கமளிக்கவும் ஒருங்கிணைக்கும் தேசிய மின்னணு உள்கட்டமைப்பாகவும் தேசிய டிஜிடல் கல்வி கட்டமைப்பு விளங்கும். ஏற்றத்தாழ்வுகளை நீக்கி அனைவருக்கும் சமமான கல்வியை வழங்குவது மற்றும் கல்வித்துறையை நவீனப்படுத்துவது ஆகியவற்றில் தேசிய டிஜிடல் கல்வி கட்டமைப்பு முக்கிய பங்காற்றும். மேலும் தகவல்களுக்கு தேசிய டிஜிடல் கல்வி கட்டமைப்பு வலைத்தளத்தைப் பார்க்கவும். ஆதாரம்: தேசிய டிஜிடல் கல்வி கட்டமைப்பு