தமிழ்நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்த 4 படகுத்துறைகள் மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள் துறை தமிழ்நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்த 4 படகுத்துறைகள் அமைக்கப்படவுள்ளது. படகுப் போக்குவரத்து சுற்றுலாவை மேம்படுத்த பவானி ஆற்றில் பவானி-சங்கமேஸ்வர் ஆலயம் அருகேயும், காவேரி-கொள்ளிடம் ஆற்றில் சிதம்பரம் அருகேயும், பழையாறு ஆற்றில் கன்னியாகுமரி அருகேயும், பொன்னியாறு ஆற்றிலும் படகுத்துறைகள் அமைக்கப்படவிருக்கிறது. இவற்றில் பழையாறு, பொன்னியாறு படகுத்துறைகள் சரக்குப் போக்குவரத்திற்கும் பயன்படுத்தப்படும். மகாபலிபுரத்திலிருந்து எடியூர் பாலம் வரையும், கூவம் ஆற்றில் மெரினா கடற்கரை அருகே பக்கிங்காம் கால்வாயிலும், பழவேற்காடு ஏரியிலும் படகுத்துறைகள் அமைக்கப்படவிருக்கிறது. எண்ணூர் துறைமுகத்திலிருந்து எண்ணூர் அனல்மின் நிலையம் வரை சரக்குப் போக்குவரத்துக்கான படகுத்துறை அமைக்கப்படவுள்ளது. ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்