ஊசுடேரி பறவைகள் சரணாலயம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

ஊசுடேரி பறவைகள் சரணாலயம் அல்லது ஊசுடு ஏரி பறவைகள் சரணாலயம் (Ousteri Bird Sanctuary or Oussudu Lake Bird Sanctuary) என்பது புதுவையில் உள்ள ஒரு ஏரி ஆகும். இந்த ஏரி 2008 இல் பறவைகள் சரணாலயமாக புதுச்சேரி அரசால் அறிவிக்கப்பட்டது. காவேரி நதியின் வடக்கே புதுவையில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கிட்டத்தட்ட 390 ஹெக்டேர் பரப்பளவுடையது. நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை உலகம் முழுவதிலும் இருந்து இங்கு பறவைகள் படையெடுக்கும். சில பறவைகள் இனபெருக்கம் செய்ய ஏற்ற சூழ்நிலை இங்கு உள்ளது.

2008 ஆம் ஆண்டு புதுவை அரசு இந்த ஏரியை பறவைகள் சரணாலயமாக அறிவித்தது. 800 ஹெக்டர் பரப்பளவு கொண்ட இந்த எரி புதுவை பகுதியில் 390 ஹெக்டரும் தமிழக பகுதியில் 410 ஹெக்டரும் உள்ளது. இங்கு காணப்படும் பறவைகள் சிலவற்றின் பட்டியில் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த நன் நீர் ஏரியில் உள்ள பல நீர்த் தாவரங்கள் (பெருநிலைத் தாவரம்) பறவைகள் உணவை கொள்கின்றன.

சராசரி கடல் மட்டத்தில் இருந்து சுமார் 15 மீட்டர் மேட்டில் அமைந்து உள்ளது.

ஆண்டின் சராசரி அதிகபட்ச வெப்ப நிலை -33.1 செல்சியஸ்

ஆண்டின் சராசரி குறைந்தபட்ச வெப்ப நிலை - 24.1 செல்சியஸ்

ஆண்டின் மொத்த மழைப் பொழிவு அளவு - 1338 மில்லிமீட்டர்

பட்டாம் பூச்சி பலவகைகள் இங்கு உள்ளன.

பறவைகள் பட்டியல்

பூநாரை

நத்தை குத்தி நாரை

மஞ்சள் மூக்கு நாரை

உண்ணிக்கொக்கு

கரண்டிவாயன்

குள்ளத்தாரா

காட்டு வாத்து

பட்டைத்தலை வாத்து

கருநீர்க்கோழி

சாதாரண மைனா

நீலச்சிறகி

அன்னம்

வெண்தலை சிலம்பன்(பன்றிக்குருவி )

குளத்துக் கொக்கு

தட்ட வாயன்

ஊசிவால் வாத்து

சாம்பல் கூழைக்கடா

குயில்

ஆதாரம் : ஜெ.பிரபு, புதுச்சேரி