படக்கதை புத்தகம் மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சகம் “லெட்ஸ் மூவ் ஃபார்வர்ட்" (Let’s Move Forward) என்ற தலைப்பில் ஒரு புதுமையான படக்கதைகள் (Comic Book) புத்தகத்தை வெளியிட்டுள்ளது. இந்தப் படக்கதைப் புத்தகம், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுமம் [National Council of Educational Research and Training (NCERT)] மற்றும் யுனெஸ்கோ புது தில்லி (UNESCO New Delhi) ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும். “லெட்ஸ் மூவ் ஃபார்வர்ட்” காமிக் புத்தகம் இளம் பருவத்தினரின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் பள்ளி சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு திட்டத்தின் 11 கருப்பொருள் கூறுகள் தொடர்பான முக்கியமான தகவல்களை உள்ளடக்கியது. இந்த புதுமையான அணுகுமுறை சுகாதாரம் தொடர்பான அறிவைப் பரப்புவதோடு மட்டுமல்லாமல், விரிவான தனிப்பட்ட வளர்ச்சிக்குத் தேவையான வாழ்க்கைத் திறன்களைப் பெறுவதற்கும் உதவுகிறது. இது இந்தி, ஆங்கிலம், அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் உள்ளது. “லெட்ஸ் மூவ் ஃபார்வர்ட்" படக்கதை புத்தகம் நாடு முழுவதும் உள்ள பல்வேறு கல்வி மற்றும் சுகாதார நிறுவனங்களில் விநியோகிக்கப்படும். மாநில பள்ளிக் கல்வித் துறைகள், ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள், கல்வியில் மேம்பட்ட ஆய்வு நிறுவனங்கள், மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் [District Institutes of Education and Training (DIETs)], வட்டார ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் மற்றும் மாநில சுகாதாரத் துறைகளை உள்ளடக்கியது. கூடுதலாக, இப்புத்தகங்கள் சிபிஎஸ்இயுடன் (CBSE) இணைக்கப்பட்ட 29000 பள்ளிகளுக்கு விநியோகிக்கப்படும். படக்கதைகள் புத்தகத்தின் மின்னணு பதிப்பை கல்வி அமைச்சகம் [Ministry of Education (MoE)], என்சிஇஆர்டி (NCERT), யுனெஸ்கோ (UNESCO) மற்றும் திக்சா (DIKSHA) இணையதளங்களிலிருந்து பெறலாம். இந்தப் படக்கதைப் புத்தகத்தை வாசிக்க, இங்கு க்ளிக் செய்யவும்.