கிராமிய கைவினைப் பொருட்கள் பெரும்பாலும் பொம்மைகள் மற்றும் அலங்காரப் பொருட்களே ஆகும். இப்பொருட்கள் சுற்றுச்சூழலை பாதிக்காத வண்ணமுள்ள பொருட்களை கொண்டு, எளிமையான முறையில் இலை, பிரம்பு, காய், மரம் மற்றும் மட்பண்டங்களை கொண்டு செய்யப்படுபவை. மேலே கூறப்பட்ட பொருட்களுடன் வரைபடத்தாளையும் சேர்த்து இயக்காற்றலுடைய, உயிரூட்டம் பெற்ற அழகான பொம்மை அல்லது ஒரு பொருளை தயார் செய்யலாம். பனங்குருத்தாலான மயில் மூலப்பொருட்கள் பனையின் குருத்து ஒலை வரைபடத் தாள் வண்ணச் சாயம் கத்தரிக்கோல் பென்சில் நூல் செய்முறை வரைபட தாளைக்கொண்டு ஒரு மயிலின் உருவத்தை வடிவமைத்துக்கொள்ள வேண்டும். பின்பு பனையின் குருத்தோலையை வட்ட வடிவமாக நறுக்கி எடுத்து கொள்ளவும். பிறகு வரைபடத்தாளில் இரண்டு மயிலின் தோகையை வரைந்து, குருத்தோலையின் இரண்டு புறமும் ஒட்ட வேண்டும். இந்த குருத்தோலை பிறகு மயிலின் தோகையாக அமையும். பிறகு சரிகை மற்றும் வேலைப்பாடுடைய பொருட்களை கொண்டு அழகூட்ட வேண்டும். தென்னங்குருத்தோலை மீன் மூலப்பொருட்கள் தென்னையின் குருத்தோலை மணி - 2 (அல்லது) வண்ணத்தாள் ஊசி நூல் செய்முறை நான்கு குருத்தோலையை எடுத்துக்கொள்ளவும். அதை 15 செ.மீ. அகலத்திற்கு நறுக்கி எடுக்கவும். ஒலையை மடித்தும் பிறகு உட்செலுத்தியும் மீனின் செதில்கள் போன்று செய்ய வேண்டும். பிறகு இரண்டு துண்டு ஒலையைச் செருகி வால் உருவாக்க வேண்டும். இரண்டு மணி அல்லது வண்ணத்தாளை வட்டமாக நறுக்கி கண்களை ஒட்ட வேண்டும். இப்பொழுது அழகான பனை ஓலையிலான மீன் உருவம் கிடைத்துவிடும். பனை அல்லது தென்னை ஓலைப் பாய்கள் மூலப்பொருட்கள் பனை அல்லது தென்னையின் குருத்தோலை செய்முறை ஒலையை 1, 2, அ, ஆ என்று எண்ணிட்டுக்கொள்ள வேண்டும். "அ" என்ற ஒலையை தூக்கி இடையில் 1 என்ற ஒலையை செருக வேண்டும். இதுபோலவே "ஆ" மற்றும் 2 என்ற ஒலையையும் மாற்றி மாற்றி செருகி பாய் தயாராகும்வரை செய்து பனம்பாய் அல்லது தென்னை ஒலைப்பாய் செய்தல் வேண்டும். பனை ஓலை பாம்பு ஒரு பனை ஓலையை எடுத்து முனை வரை இரண்டாக கிழிக்க வேண்டும். பிறகு அதை பாம்பு போல பின்ன வேண்டும். முகத்திற்கு பாம்பு போன்ற வரைப்படத்தாள் ஒன்றை வரைந்து ஒட்டிவிட்டால் பாம்பு போல இருக்கும். இது கிராமங்களில் மிகவு பிரசித்தி பெற்றது ஆகும். கூம்பு வடிவ பொம்மை மூலப்பொருட்கள் சிறிய உருளைக்கிழங்கு சுள்ளிகள் காய்ந்த இலை அல்லது வரைபடத்தாள் செய்முறை முகவமைப்பிற்கேற்றப்படி சிறு குச்சிகளைக் கொண்டு, உருளைக்கிழங்கை அடுக்கி அழகுப்படுத்தவும். மேலும் காய்ந்த இலைகளை கொண்டு சிகை அலங்காரம் செய்யவும். குச்சிகளைச் சுற்றி காய்ந்த இலைகளைக் கொண்டு உடை அலங்காரம் செய்ய வேண்டும். உருளைக்கிழங்கால் அலங்கரிக்கப்பட்ட குச்சிகளுடன் அமைக்கப்பட்ட உருளைக்கிழங்கின் பகுதியை இணைக்க வேண்டும். காய்ந்த இலைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உடையை வரைப்பட தாளின் மூலமாகவும் தயாரிக்கலாம். மூலப்பொருட்கள் உபயோகப்படுத்தப்பட்ட காகிதம் பசை மாவிலை வண்ணக் காகிதம் (சிகப்பு, பச்சை, கருப்பு) மாதுளை செய்முறை ஒரு காகிதத்தை நீள வட்டவடிவமாகவும் மற்றொரு காகிதத்தை வட்டவடிவமாகவும் கசக்கி வைத்துக் கொள்ளவும். வண்ணம் தீட்டப்பெற்ற குச்சிகளாலும், மாதுளையின் தோல்பாகத்தாலும் அலகு, கண்கள், கழுத்துப்பட்டி மற்றும் கால்களை செய்ய வேண்டும். அதேபோல நீள்வட்டமாக சுருட்டப்பட்ட காகிதத்தை மாவிலைக் கொண்டு மூடி அலங்கரிக்க வேண்டும். குச்சிகளை பசையின் உதவியால், உடலின் அடிப்பாகத்தில் ஒட்டவைத்து கால்கள் உருவாக்க வேண்டும். இவ்வாறு மயில் பொம்மை செய்யலாம். ஜஸ்கிரீம் குச்சி பென்சில் பேழை மூலப்பொருட்கள் அட்டைத்தாள் ஐஸ்கிரீம் குச்சிகள் பசை வண்ணத்தாள் செய்முறை படத்தில் காட்டப்பட்டுள்ளது போல 5 குச்சிகளை அடுக்கிக் கொள்ளவும். அதில் 4 குச்சிகளை சதுரமாக அடுக்கி வைத்துக் கொள்ளவும். இவ்வாறு மாறி மாறி அடுக்கி ஒவ்வொரு வரிசையையும் பசை கொண்டு ஒட்டி சிறிய கூடைபோல செய்து அதன் மேல்பகுதியில் வண்ணத்தாள்களால் மலர்களை செய்து அலங்கரித்து கொள்ளலாம். துடைப்பத்தினால் செய்யப்படும் பொம்மை மூலப்பொருட்கள் துடைப்ப குச்சி சணல் / நாரிழை கண்ணுக்குப் பசைத்தாள் வண்ணத்தாள் ஒட்டுப்பசை செய்முறை மூன்று சென்டிமீட்டர் அளவுக்கு ஒரே அளவாக துடைப்ப குச்சிகளை நறுக்கி அதை நாரிழையினால் ஒரு நுனியில் கட்டிவிட வேண்டும். ஒரு வண்ணத்தாளை வட்டமாக நறுக்கி, கண், மூக்கு மற்றும் வாய் வரைந்து ஒட்ட வேண்டும். தலைமுடிக்கு 5 செ.மீ. நீளமுள்ள நாரிழையால் தலையின் உச்சிப் பகுதியில் இருபக்கமும் சமமாக தொங்குமாறு ஒட்டிவிட வேண்டும். இதேபோல ஆண் உருவமும் செய்யலாம். தேங்காய் ஒட்டில் முகம் மூலப்பொருட்கள் தேங்காய் ஒடு தேங்காய் நார் வண்ணம் (அல்லது) வண்ணத்தாள் கத்தரிக்கோல் செய்முறை தேங்காயின் அடிப்பாகத்தை எடுத்து அதன் கண்களை வீணாக்கிவிடாமல் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். நாரை நீக்கிவிட வேண்டும். தேங்காய் ஒட்டின் தலைப்பகுதியில் நாரை முடிபோல் ஒட்டவைக்க வேண்டும். பிறகு முகத்திற்கு வண்ணம் கொடுத்து முடியை அழகாக கட்ட வேண்டும். சோளத்தில் பொம்மை மூலக்கூறு கூம்பு வடிவ சோளக்கதிர் - 1 சோளத்தைச் சுற்றியுள்ள நார்ப்பகுதி சோளத்தின் இலைப்பகுதி எலுமிச்சம் பழம் - 1 மிளகு - 2 ஊசி - 2 ஊசி நூல் செய்முறை ஒரு சோளக்கதிரை எடுத்துக்கொண்டு அதற்கு சோளத்தின் இலையைக் கொண்டு சேலை உடுத்தி சட்டை அணிவித்து, சோளத்தின் இலையினால் இடுப்புபோல் செய்யவும். தென்னங்குரும்பை தலையாக அமைத்து நாறினால் ஊசியைக் கொண்டு தலைமுடியை தைத்தோ அல்லது ஒட்டிவிடவோ வேண்டும். பிறகு, கண்ணுக்கு இரண்டு மிளகையும் முகத்தில் ஒட்டிவைக்க சோளக்கொல்லை பொம்மை அழகாக அமைந்துவிடும். சணல் பெண் மூலப்பொருட்கள் சணல் பசைத்தாள் - சிகப்பு கால்களுக்கும், கைகளுக்கும் கலர் நூல் அட்டை செய்முறை ஐந்து சென்டிமீட்டர் நீளமுள்ள சணல்களை சிறு அட்டைத்தாளில் சுற்ற வேண்டும். தலைப்பகுதியை சணலால் முடித்து அட்டைத்தாளை எடுத்துவிட்டு கழுத்துப் பகுதியில் கட்ட வேண்டும். 4 அல்லது 5 சணல் நார்களை கைகளுக்காக விட்டு விட்டு இடைப்பகுதியில் ஒரு கட்டு போடவும். மற்றப்பகுதியை இரண்டு பாகமாக பிரித்து கால்களாகவும் இறுதியில் கையின் நுனிப்பகுதி மற்றும் காலின் நுனிப்பகுதியையும் கட்ட வேண்டும். கண் மற்றும் மூக்கு வைத்து பொம்மையாக்க வேண்டும். சணல் பெண் மூலப்பொருட்கள் சணல் பசைத்தாள் - சிகப்பு கால்களுக்கும், கைகளுக்கும் கலர் நூல் அட்டை செய்முறை ஐந்து சென்டிமீட்டர் நீளமுள்ள சணல்களை சிறு அட்டைத்தாளில் சுற்ற வேண்டும். தலைப்பகுதியை சணலால் முடித்து அட்டைத்தாளை எடுத்துவிட்டு கழுத்துப் பகுதியில் கட்ட வேண்டும். 4 அல்லது 5 சணல் நார்களை கைகளுக்காக விட்டு விட்டு இடைப்பகுதியில் ஒரு கட்டு போடவும். மற்றப்பகுதியை இரண்டு பாகமாக பிரித்து கால்களாகவும் இறுதியில் கையின் நுனிப்பகுதி மற்றும் காலின் நுனிப்பகுதியையும் கட்ட வேண்டும். கண் மற்றும் மூக்கு வைத்து பொம்மையாக்க வேண்டும். வளையல் படம் மூலப்பொருட்கள் உடைந்த வண்ண கண்ணாடி வளையல்கள் பசைத்தாள் - சிகப்பு அட்டை கத்திரிக்கோல் பசை செய்முறை அட்டைத்தாளிலோ அல்லது வரைபடத்தாளிலோ ஏதோ ஒரு படத்தை வரையவேண்டும். பிறகு பசையின் உதவி கொண்டு வண்ண, வண்ணமாக பொருத்தி ஒரு வண்ண அழகுடன் கூடிய பொம்மை செய்யலாம். பூச்செண்டு மூலப்பொருட்கள் பசும்புல் வண்ணத்தாள்கள் கத்தரிக்கோல் துடைப்பம் – 1 வண்ணத்துப்பூச்சி மூலக்சவகூறு வார இதழ் – புத்தக மேல் அட்டை – 2 ஸ்டேப்ளர் (அல்லது) ஊசி மற்றும் நூல் கத்தரிக்கோல் செய்முறை இரண்டு துண்டுகள் சதுர வண்ண அட்டைத்தாளை எடுத்துக் கொண்டு அதை 25 செ.மீ. X 25 செமீ அளவுள்ள துண்டாக வெட்டி எடுத்து எதிர் எதிர் மூலைகள் சேருமாறு மடித்துக் கொள்ளவும். பிறகு தாள் தைப்பு முட்கருவியாலோ அல்லது ஊசி நூலாலோ இரண்டு தாளின் மையப்பகுதியையும் தைத்து சீராக விரித்து உடல், தலை, கண் மற்றும் உணர்வு கொம்புகள் அமைத்து முழு காகித வண்ணத்துப் பூச்சியை உருவாக்கி அதை சுவரிலோ அல்லது வரைபடத்தாளிலோ ஒட்டி வைக்கலாம். செய்முறை பசும்புல் எடுத்துக்கொண்டு அதன் சிறிய மற்றும் காய்ந்த இலைகளை நீக்கிவிடவும். வண்ணத்தாள்களை பூ போல நறுக்கி அதன் நடுப்பகுதியில் சிறுதுளையிடவும் பிறகு இரண்டு அல்லது மூன்று பூக்களை குச்சியில் செருகவும். பல வண்ணத்தாள்களை கொண்டு குச்சியின் அடிபாகத்தில் நூலால் சுற்றவும் பூச்செண்டு போல கட்டவும் பிறகு அதன் கீழ்பாகத்தை பச்சை வண்ணத்தாளை கொண்டு சுற்றவும். பேப்பர் துண்டாலோ, பொன் மற்றும் வெள்ளிநிற பேப்பர் கொண்டு ரிப்பன்போல கட்டிவிட்டால் அழகான பூச்செண்டு உருவாகிவிடும். காகித கைவிசிறி செய்முறை மொத்தமான பேப்பரை எடுத்து சுருளாக சுற்றவும். அந்த சுருளை 2 செ.மீ. இடைவெளியில் நறுக்கவும். பிறகு அச்சுருளை மூன்று மடிப்புகளாக சுருட்டவும். மையச்சுருளின் செங்குத்தான கோட்டிற்கு செங்கோணத்தின் நடுப்பகுதியில் நறுக்கவும். இப்பொழுது நுனியிலுள்ள பேப்பர் பகுதியை இழுக்க ஒரு பேப்பர் விசிறி கிடைத்துவிடும். அச்சு பிரதிஎடுத்தல் அச்சு பிரதியெடுத்தல் நம் நாட்டில் துணி, பேப்பர் மற்றும் மரக்கட்டைகள் ஆகியவற்றில் தொன்றுதொட்டு செய்துவரும் செயலாகும். மூலப்பொருட்கள் மண்பாண்டத்திலான கிண்ணம் - 2 கரண்டி கடற் பஞ்சு அச்சு பிரதியெடுக்க வெள்ளைத்துணி இரசாயனப் பொருட்கள் - கடுங்களி 100 கிராம் மண்ணெண்ணை - 300 கிராம் யூரியா - 10 கிராம் வண்ணங்கள் நிலையாக இருக்கச் செய்யும் பொருள் - 25 கிராம் சாயம் - 25 கிராம் அச்சு மரக்கட்டையிலோ, தெர்மாக்கோல் அல்லது காய்கறிகள் ஆகியவற்றில் உருவரைப்படம் வரைந்து அதை சாயமுள்ள பஞ்சு திணியுரையில் தோய்த்து துணியில் அச்சிடலாம். வெவ்வேறு வண்ணத்திற்கு வெவ்வேறு அச்சு பயன்படுத்தப்படுகிறது. சாயம் தயாரித்தல் முதலில் கடுங்களியையும், மண்ணெண்ணையையும் கலந்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு யூரியாவையும், வண்ணத்தை திடமாக வைத்துக்கொள்ளும் பொருளுடன் ரசாயன பொருளையும் கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இவை இரண்டையும் ஒன்றாக கலந்துகொள்ளவும். மிகவும் திடமாக இருந்தால், மேலும் சிறிது யூரியாவை சேர்க்க வேண்டும். திடமாக திரவம் வேண்டுமானால் வண்ணத்திடப் பொருளை சேர்க்க வேண்டும். மேசை தயாரித்தல் மேசையின்மீது சாக்கு அல்லது கம்பளம் போன்றவற்றை ஒன்றன்மீது ஒன்றாக மெதுவாக அடுக்கி பிறகு அதன்மீது பாலீதின் காகிதம் வைத்து ஊசிகுத்தி ஆடாமல் வைத்துக் கொள்ளவும். இந்த அடுக்கு மென்மையாக இருப்பதால் அச்சுப்பிரதி அல்லது அச்சு பொறிக்க வசதியாக இருக்கும். இல்லையெனில் அச்சுப்பிரதி கெட்டுவிடும். செய்முறை ஒரு பிளாஸ்டிக் தட்டில் மெலிதான பஞ்சை வைக்கவும். அதன்மீது சாயப்பசையை இடவும். பிறகு அச்சை மெதுவாக சாயமுள்ள பஞ்சு திணியுறையில் அழுத்தியெடுத்து துணியில் முத்திரையிடவும். முத்திரைகள் பதிக்கப்பட்ட துணியை, மண்ணெண்ணையின் வாசம் போகும்வரை உலரவைத்து பிறகு இஸ்திரி செய்யவும். அலங்கார மட்கலன் மூலப்பொருட்கள் மட்பாண்டம் அல்லது தட்டுகள் சீமை சுண்ணாம்புத் தூள் பசை அல்லது மைதாமாவுக்கூழ் வண்ணம் ப்ரஷ் கண்ணாடி துகள்கள் சரிகை துகள்கள் பழைய வாழ்த்து அட்டைகள் செய்முறை மண்பாண்டத்தின் மேல் அல்லது தட்டின் மேல் ஒரு படமோ அல்லது இயற்கை காட்சியையோ வரைந்து கொள்ள வேண்டும். பிறகு கண்ணாடித் துண்டுகள் சரிகை துணுக்குகளைக் கொண்டு தேவையான இடத்தில் ஒட்டி அலங்கரிக்க வேண்டும். சீமை கண்ணாம்புடன், பசை கலந்து கூழ்போன்று எடுத்துக்கொள்ள வேண்டும் அல்லது மைதா மாவை காய்ச்சி கூழாக்கி பசையாக உபயோகிக்கலாம். இப்பசை கலவையைக் கொண்டு புஷ்பம், பழம் போன்றவை செய்து அதை மட்கலத்தில் ஒட்ட வேண்டும். பிறகு அதற்கு வர்ணம் பூசி உயிரோட்டம் கொடுக்க வேண்டும். மண்தட்டின் உட்புற சுற்றளவுக்கேற்ப வாழ்த்து அட்டையை வெட்டி ஒட்டவும். பிறகு தெர்மாகோல் தட்டின் உட்புறம் ஒட்டி முப்பரிமாண வடிவம் கொடுக்கவும். ஆதாரம் : சி.பி.ராமசாமி ஐயர் பவுண்டேசன்