சர்வதேச தாய்மொழி தினம்

இந்த உலகத்திற்கும் அதில் வாழும் மக்களுக்கும் மொழி என்பது ஒரு சமூகத்தினுடைய அடையாளம். தொடர்பாடல், சமூக இடைத்தொடர்பு, கல்வி மற்றும் அபிவிருத்தி போன்ற அனைத்திற்கும் அடிப்படையானது. ஆனபோதிலும் உலகமயமாதலினால் மொழிகள் அச்சுறுத்தலுக்குள்ளாதல் அல்லது மறைந்துபோகும் தன்மை அதிகரித்துச் செல்கின்றது. இவ்வாறான மொழிகள் மறைந்து போகும் தன்மையினால் கலாச்சார பன்முகத்தன்மையானது உலகின் பணக்கார திரைச்சீலை கொண்டு மறைக்கப்படுகின்றது. இதனால் வாய்ப்புக்கள், மரபுகள், நினைவுகள் அல்லது ஞாகச்சின்னங்கள், ஐக்கியப்படுத்தப்பட்ட எண்ணங்கள் மற்றும் வெளிப்பாடுகள் போன்ற வளமான எதிர்காலத்தினை உறுதிப்படுத்தும் அல்லது பாதுகாக்கும் வளங்களும் தொலைக்கப்படுகின்றன.

உலகில் உள்ள 50 சதவீதமான மொழிகள் (கிட்டத்தட்ட 7000 மொழிகள்) இன்னும் சில பரம்பரைகளோடு அழிந்து போகலாம். இந்த அழியும் அபாயத்தில் உள்ள மொழிகளில் 96 சதவீதமானவற்றினை இந்த உலகில் வாழும் வெறுமனே 4 சதவீத மக்களே பேசுகின்றனர். இதில் சில நூறு மொழிகளே கல்விச் செயற்பாடுகளுக்கும் ஏனைய பொது விடயங்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றது. நூற்றுக்கும் குறைவான மொழிகளே தற்போதைய இணையம் போன்ற டிஜிட்டல் உலகில் பயன்படுத்தப்படுகின்றன.

சர்வதேச தாய்மொழி தினமானது நவம்பர் 1999 ஆண்டு யுனெஸ்கோவினுடைய பொது மாநாட்டில் பிரகடனப்படுத்தப்பட்டது. 16 ஆம் தேதி மே மாதம் 2007 இல் ஐக்கிய நாடுகளுடைய பொதுச்சபையானது தனது உறுப்புநாடுகளில் இந்த உலகில் வாழும் அனைத்து மக்களது மொழிகளையும் பாதுகாப்பது என தீர்மானம் மேற்கொண்டது. குறித்த தீர்மானத்திற்கு அமைய ஐக்கியநாடுகள் பொதுச்சபையானது 2008 ஆம் ஆண்டு பன்மொழி மற்றும் பன்முக கலாச்சாரத்தினூடாக பல்முகத்தன்மையின் ஐக்கியத்தினையும் சர்வதேச புரிந்துணர்வையும் ஊக்கப்படுத்தும் நோக்கில் சர்வதேச மொழிகள் தினத்தினை பிரகடனப்படுத்தியது. சர்வதேச தாய்மொழி தினமானது கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் உற்றுநோக்கப்பட்டு வருகின்றது. 2005 ஆம் ஆண்டு யுனஸ்கோ அமைப்பானது பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதியினை தாய்மொழி தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது.

ஆதாரம் : திட்டம் மாத இதழ்