கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு, 2021 ஆண்டில், தமிழ்நாடு அரசால் ‘கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. விருது’ தோற்றுவிக்கப்பட்டு பின்வருமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டது. முதன் முறையாக திரு. எண்ணரசு கருநேசன் அவர்களுக்கு விருதுத் தொகையாக ரூபாய் 5 இலட்சம் வழங்கப்பட்டது. கப்பல் கட்டுமானம், தொழில்நுட்பம், போக்குவரத்து ஆகிய கப்பல் தொடர்பான துறைகளில் ஈடுபட்டு, சிறந்த பங்காற்றி வரும் தமிழர் ஒருவருக்கு ‘கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. விருது’ ஆண்டுதோறும் வழங்கப்படும். விருதுத் தொகையாக ரூ. 5 இலட்சம் மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பெறும். ‘‘கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. விருது” க்கு விண்ணப்பப் படிவம் தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.tn.gov.in என்ற வலைத்தளத்தில் ‘விருது விண்ணப்பம்‘ என்ற பகுதியில் விலையின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிப்பவர்கள் தன்விவரக் குறிப்பு, நிழற்படம் இரண்டு கப்பல் கட்டுமானம், தொழில்நுட்பம், போக்குவரத்து ஆகிய கப்பல் தொடர்பான துறைகளில் ஈடுபட்டு பங்காற்றிய விவரங்களுடன் தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ் வளர்ச்சி வளாகம் முதல் தளம், தமிழ்ச் சாலை, எழும்பூர், சென்னை 600 008 என்ற முகவரிக்கு குறிப்பிட்ட தேதிக்குள் அனுப்ப வேண்டும். தொலைபேசி எண்: 044-28190412, 044-28190413மின்னஞ்சல் முகவரி: tamilvalarchithurai@gmail.com வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9