கலை பண்பாட்டுத்துறை நுண்கலைப் பிரிவில் உள்ள கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் மாநில அளவிலான மரபுவழி / நவீன பாணி பிரிவில் ஓவிய-சிற்பக் கலைக்காட்சிகளை நடத்தி, சிறந்த கலைப்படைப்புகள் வழங்கும் கலைஞர்களுக்கு பரிசுத்தொகையும், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கியும், மாநில அளவில் கலைச்செம்மல் விருதும் வழங்கி கலைஞர்களை ஊக்குவித்து வருகிறது. தமிழகத்தில் ஓவிய, சிற்பக் கலைத்துறையில் சிறந்து விளக்கும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் 2022 ஆண்டு முதல் 10 கலையாசிரியர்களுக்கு தலா ரூ. 10000 வீதமும், ஓவியம், சிற்பக்கலைப் பிரிவில் சிறந்த கலை நூல்களை பதிப்பித்த நூலாசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் 10 கலை நூல் ஆசிரியர்களுக்கு ரூ.10000 வீதமும் பரிசுத் தொகையும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது. தமிழகம் முழுவதுமுள்ள ஓவியக்கலை மற்றும் சிற்பக் கலை ஆசிரியர்களிடமிருந்தும் ஓவிய, சிற்பக் கலைப்பிரிவில் நூல்களை பதிப்பித்த நூலாசிரியர்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் பின்வரும் விதிமுறைகளின்படி வரவேற்கப்படுகின்றன. சிறந்த கலை நூல் ஆசிரியர்களுக்கான விண்ணப்ப படிவம் ஓவிய, சிற்பக்கலை ஆசிரியர்கள் தங்களின் புகைப்படத்துடன் (Passport Size Photo) கூடிய தன்விவரக் குறிப்புடன் (பெயர், பிறந்த தேதி, கலைப்பிரிவுகளில் பெற்றுள்ள கல்வித் தகுதிகள், அனுபவம், இதுவரை பெற்ற விருதுகள், சான்றிதழ்கள் உள்ளிட்ட விவரங்களுடன்) கூடிய விண்ணப்பத்தினை அனுப்பி வைக்க வேண்டும். ஓவியம் மற்றும் சிற்பக் கலைப்பிரிவில் கலை நூல்கள் பதிப்பித்துள்ள நூலாசிரியர்கள் தங்களின் புகைப்படத்துடன் (Passport Size Photo) கூடிய தன்விவரக் குறிப்புடன் பெயர், பிறந்த தேதி, கலைப்பிரிவுகளில் பெற்றுள்ள கல்வித் தகுதிகள், அனுபவம், இதுவரை பெற்ற விருதுகள், சான்றிதழ்கள், பதிப்பித்த நூல் ஆகியவற்றினை இணைத்து அனுப்பி வைக்கவேண்டும். கலை பண்பாட்டுத்துறையால் அமைக்கப்படும் தெரிவுக்குழுவின் மூலம் சிறந்த கலையாசிரியர்கள் மற்றும் சிறந்த கலை நூலாசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர். மேற்காணும் விவரங்களின் அடிப்படையில் உரிய தன் விவரக் குறிப்புடன் கூடிய விண்ணப்பங்களைப் பின்வரும் முகவரிக்கு அனுப்புதல் வேண்டும். குறிப்பு ஆதார் அடையாள அட்டை நகல் கண்டிப்பாக இணைத்தல் வேண்டும். ஆதார் அடையாள அட்டை இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். விண்ணப்பங்களுடன் கலைஞர்களின் முழுமையான விவரங்களுடன் கூடிய Profile இணைக்கப்படவேண்டும். அதில் இதுகாறும் பெற்ற சான்றிதழ்கள், செய்தி நறுக்குகள், தங்களால் உருவாக்கப்பட்ட கலைப்படைப்புகள், தாங்கள் பணிபுரியும் கல்வி நிறுவனத்தின் சான்றிதழ் உள்ளிட்ட விவரங்களை இணைத்து அனுப்பி வைத்தல் வேண்டும். தேர்வுக்குழுவானது தங்களால் வழங்கப்படும் விண்ணப்பங்களின் அடிப்படையில், தகுதியான கலையாசிரியர்களை தேர்வு செய்யும். தேர்வுக்குழுவின் முடிவே இறுதியானது. தேர்வு செய்யப்பட்ட கலைஞர்களுக்கு விவரம் புலனம் (Whatsapp), மின்னஞ்சல் (E-mail) வாயிலாக விவரம் தெரிவிக்கப்படும். இயக்குநர்கலை பண்பாட்டுத்துறைதமிழ் வளர்ச்சி வளாகம், இரண்டாம் தளம்தமிழ்ச் சாலை, எழும்பூர், சென்னை 600002தொலைபேசி எண்: 28193195, 28192152 மேலும் தகவலுக்கு https://artandculture.tn.gov.in/tamil-nadu-oviya-nunkalai-kuzhu இணைய தொடர்பை பார்க்கவும். வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9