இந்தியாவின் தலைசிறந்த தொழில்நுட்ப நிறுவனமான ஐஐடி மெட்ராஸ் (IIT Madras) நிரலாக்கல் மற்றும் தரவு அறிவியல் (Programming and Data Science) பாடங்களை இணையவழியில் (Online) வழங்குகிறது. அடிப்படை படிப்பு (Foundation Programme), பட்டயப் படிப்பு (Diploma Programme), இளநிலை பட்டப்படிப்பு (Degree Programme) என மூன்று நிலைகளில் வழங்கப்படுகிறது. அனுபவம் வாய்ந்த ஐஐடி மெட்ராஸ் ஆசிரியர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களால் இணையவழியில் பாடங்கள் கற்பிக்கப்படும். 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், 11 ஆம் வகுப்பு இறுதி தேர்வு எழுதியவர்களும் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். பட்டதாரிகள் மற்றும் பணிபுரிபவர்கள் ஆகியோரும் விண்ணப்பிக்கலாம். இதில் சேர்வதற்கு வயது வரம்பு கிடையாது மற்றும் அனைத்து கல்விப் பின்னணியில் உள்ளவர்களும் சேரலாம். மேலும் தகவல்களுக்கு www.onlinedegree.iitm.ac.in வலைத்தளத்தைப் பார்க்கவும். ஆதாரம்: www.onlinedegree.iitm.ac.in