தமிழக அரசின் சார்பில் அண்ணா பல்கலைக்கழகம் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வை (TANCET) ஆண்டுதோறும் நடத்துகிறது. தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகத் துறைகள், பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகங்கள், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் (பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்) மற்றும் சுயநிதிக் கல்லூரிகள் (பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உட்பட) ஆகியவற்றில் M.B.A., M.C.A. மற்றும் M.E. / M.Tech. / M.Arch. / M.Plan. ஆகிய முதுகலை பட்டப் படிப்புகளில் சேர விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் தகவல்களுக்கு www. tancet.annauniv.edu வலைத்தளத்தைப் பார்க்கவும். ஆதாரம்: TANCET