இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் [Indian Institute of Mass Communication (IIMC)] மாஸ் கம்யூனிகேஷன் (Mass Communication), இதழியல் (Journalism) ஆகிய முதுகலை டிப்ளமோ (Postgraduate Diploma) படிப்புகளுக்கான சேர்க்கையைத் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு முதல், தேசிய தேர்வு முகமை [National Testing Agency (NTA)] நடத்தும் மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு [Central University Entrance Test (CUET)] மூலம் ஐஐஎம்சி (IIMC) சேர்க்கைகள் நடைபெறும். ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைனில் https://cuet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பின்வரும் முதுநிலை டிப்ளமோ (PG Diploma) படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை ஐஐஎம்சியில் (IIMC) என்டிஏ (NTA) நடத்தும்: ஆங்கில இதழியல் (English Journalism) இந்தி இதழியல் (Hindi Journalism) விளம்பரம் மற்றும் மக்கள் தொடர்பு (Advertising and Public Relations) ரேடியோ மற்றும் டிவி இதழியல் (Radio and TV Journalism) டிஜிட்டல் மீடியா (Digital Media) பல்வேறு படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, கவுன்சிலிங் மூலம் நடத்தப்படும். இது பற்றிய விவரங்கள் விரைவில் ஐஐஎம்சி தகவல் தொகுப்பில் கிடைக்கும். இதற்கான விண்ணப்பப் படிவங்கள் ஐஐஎம்சி இணையதளத்தில் www.iimc.gov.in வெளியிடப்படும். மேலும் விவரங்களுக்கு, விண்ணப்பதாரர்கள், கீழ்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்: கல்வித்துறைஇந்திய மக்கள் தொடர்பு நிறுவனம்அருணா ஆசஃப் அலி மார்க்புது தில்லி-110067 தொலைபேசி எண்: 011-26742920, 26742940, 26742960 (நீட்டிப்பு 233)மொபைல் எண்: 9818005590மொபைல் எண்: 9871182276 (வாட்ஸ்அப் செய்திக்கு மட்டும்) ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்