தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் அங்கங்களாக செயல்படும் (TNCU 26 + 2 others) கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அவர்கள் அறிவுறுத்தியுள்ள நிபந்தனைகளின்படி 2024–25 ஆம் ஆண்டில் பயிற்சியாளர்களின் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையதள வழியாக விண்ணப்பிக்கவும், விண்ணப்பக் கட்டணம் மற்றும் பயிற்சிக் கட்டணம் ஆகியவை இணையத்தளத்தின் மூலம் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் பொதுநிதி வங்கி கணக்கில் செலுத்துவது தொடர்பாகவும், பரிசீலனைக் குழுவின் ஒப்புதல் (Scrutiny Committee) விவரம் போன்றவை கீழ்க்கண்டவாறு தெரிவிக்கப்படுகிறது. மாணவர் சேர்க்கைக்கான தகுதி பயிற்சியில் சேருவதற்கு 01.08.2024 அன்று குறைந்தபட்சம் 17 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகப்பட்ச வயது வரம்பு இல்லை 12வது வகுப்பு தேர்ச்சி (10, +2) பெற்றவர்கள் மற்றும் 10 +2 கல்வி முறையில் தேர்ச்சி பெற்ற இளங்கலை பட்டதாரிகள், பத்தாம் வகுப்பு, மூன்றாண்டு பட்டயப்படிப்பு (Diploma) பிறகு மூன்றாண்டு பட்டப்படிப்பும் (Graduate - UG/PG) முடித்தவர்கள். (10+3+3) விண்ணப்ப முறை விண்ணப்பங்கள் இணையவழி மூலம் மட்டுமே பெறப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெறும். பெறப்படும் விண்ணப்பங்களை தேர்வு குழுவிற்கு (Selection Committee) சமர்ப்பித்து தேர்வு செய்யப்படும் மாணவர்கள் பயிற்சியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பின்தங்கிய வகுப்பினர் பற்றிய அத்தாட்சி பெற்ற ஜாதி சான்றிதழ் நகல் கட்டாயமாக விண்ணப்ப மனுவுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். இல்லையெனில், அந்த விண்ணப்பங்கள் அதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட மாட்டாது. இணையவழியில் விண்ணப்பங்கள் விண்ணப்பித்த பிறகு விண்ணப்பதாரர் பரிசீலனை குழுவால் தெரிவிக்கப்படும் தேதியில் அசல் சான்றிதழ்களுடன் நேரில் பரிசீலனை குழு முன் ஆஜராகி அசல் சான்றிதழ்களை சமர்ப்பித்த பின்னர், பரிசீலனை குழு தகுதியின் அடிப்படையில் பரிசீலித்தப் பிறகு குழு அனுமதி அளித்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் சேர்க்கை வழங்கப்படும். பயிற்சிக்கான விண்ணப்பம் அனுப்பும் முறை இப்பயிற்சியில் சேர விரும்புவர்கள் விண்ணப்ப படிவத்தினை தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் www.tncu.tn.gov.in இணையத்தளவழி மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும், பதிவேற்றம் செய்த விண்ணப்பித்தினை பதிவிறக்கம் (Application Printout Copy) செய்து மற்றும் விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்களின் நகல்களையும் சுய ஒப்பமிட்ட (Self Attested) சம்மந்தப்பட்ட கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நேரில் சமர்ப்பித்து சம்மந்தப்பட்ட கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் ஒப்புதல் பெற்றுக்கொள்ள வேண்டும் அல்லது பதிவு அஞ்சலில் ஒப்புகை அட்டையுடன் (Registered Post with Acknowledgment) சமர்பிக்கப்பட வேண்டும். விண்ணப்ப கட்டணம் மற்றும் பயிற்சி கட்டணம் ஆகியவற்றை இணையத்தளத்தின் வழியாக (Online Payment) மட்டுமே செலுத்த வேண்டும். விண்ணப்பத்தில் விண்ணப்பதாரரின் Digital Signature and Passport Size Photo இடம் பெற வேண்டும். விண்ணப்பம் கட்டணம் எக்காரணத்தை கொண்டும் திரும்ப தரப்படமாட்டாது. கூடுதலாக மற்ற கூட்டுறவு மேலாண்மை நிலையங்களுக்கு விண்ணப்பம் செய்ய வேண்டி இருப்பின் ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் விண்ணப்ப கட்டணம் தனியே கட்டாயம் செலுத்தப்பட வேண்டும். இல்லையெனில் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் கல்வி உதவி தொகை பெறுவதற்கான EMIS No. (+2 சான்றிதழில் உள்ளப்படி) அல்லது கல்லூரி பட்டயப்படிப்பு/ பட்டபடிப்பு முடித்திருப்பின் UMIS No. (கல்லூரி சான்றிதழில் உள்ளப்படி) விண்ணப்பத்தில் கட்டாயம் குறிப்பிட வேண்டும். விண்ணப்பதாரர்கள் இணையத்தளத்தின் வழியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கீழ்குறிப்பிட்டுள்ளவாறு அத்தாட்சி பெற்ற சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். தகுந்த சான்றிதழ்கள் மற்றும் விவரங்கள் இல்லாத விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட மாட்டாது. S.S.L.C மதிப்பெண் பட்டியல் மற்றும் +2 மதிப்பெண் பட்டியல் (Marksheet), பட்டப்படிப்பு/ பட்டயப்படிப்பு பெற்றிருப்பின் அதற்கான Provisional Certificate. மாற்று சான்றிதழ் -Transfer certificate ஜாதி சான்றிதழ் - Community Certificate பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் பயிற்சியாளர்களின் விவரங்களை மேற்படி இணையதள முகவரி மூலம் மட்டுமே தெரிந்துகொள்ளலாம். பாடத்திட்டம் முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சியில் சேர்ந்த பயிற்சியாளர்களிடமிருந்து Rs 18850 பயிற்சி கட்டணம் வசூலிக்கப்படும். பயிற்சிக்கட்டணம் செலுத்திய பிறகு எக்காரணத்தைக் கொண்டும் திரும்ப வழங்கப்படமாட்டாது. பயிற்சியாளர் எந்த பயிற்சி நிலையத்தில் பயிற்சிக் கட்டணம் செலுத்தினாரோ, அதே பயிற்சி நிலையத்தில் மட்டுமே பயிற்சி பெற வேண்டும். வேறு எந்த பயிற்சி நிலையத்திற்கும் இடமாற்றம் செய்து தரப்படமாட்டாது. பயிற்சிக்கான திட்டங்கள் புதிய பாடத்திட்டத்தின்படி கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி ஒரு வருட கால பயிற்சியாக இரண்டு பருவ முறைகளாக (Semester I & II) (6 மாதங்கள் + 6 மாதங்கள்) பிரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடுகூட்டுறவு ஒன்றியம் நடத்தும் இறுதித் தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும், 40 சதவிகிதம் மதிப்பெண் பெற்றவர்கள் அந்தப் பாடத்தில் தேர்ச்சி பெற்றவராகக் கருதப்படுவார்கள். இறுதித் தேர்வில் 40% முதல் 59% வரை மதிப்பெண் பெறுபவர்கள் இரண்டாம் வகுப்பு எனவும், 60% முதல் 74% வரை மதிப்பெண் பெறுபவர்கள் முதல் வகுப்பு எனவும், 75% மேல் மதிப்பெண் பெற்றவர்கள் சிறப்பு நிலை எனவும், குறிப்பிட்டு கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி சான்றிதழ் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வழங்கப்படும். கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி தமிழில் மட்டுமே பயிற்றுவிக்கப்படும். பயிற்சிக்கான தேர்வுகளை தமிழில் மட்டுமே எழுத வேண்டும். மாணவர்களின் வருகை Bio-Metric செய்யப்படும். ஒரு பருவத்திற்கு குறைந்தபட்சம் 80% வருகை பதிவு இருந்தால் மட்டுமே இறுதி தேர்வு எழுத இயலும். முதல் பருவ பயிற்சி காலத்தில் பயிற்சி பெற்று தேர்வு எழுதி இரண்டாம் பருவ பயிற்சி காலத்தில் 80% வருகை பதிவு பெறாத பயிற்சியாளர்கள் பயிற்சியினை தொடர இயலாது. கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி நடத்த போதுமான ஆசிரியர்கள் வெளிக்கொணர்வு அடிப்படையில், அதாவது கூட்டுறவுத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அலுவலர்கள் மற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள் மூலமாக நடத்தப்படும். https://www.tncu.tn.gov.in/