அறிமுகம்

காவல் துறையில் காவலர், தலைமைக் காவலர், உதவி ஆய்வாளர், ஆய்வாளர், டிஎஸ்பி, ஏடிஎஸ்பி, எஸ்பி என பல்வேறு கட்டங்களில் பல்வேறு பணியிடங்கள் உள்ளன. அவைதவிர, நுணுக்கமான முறையில் நடைபெறும் குற்றங்களைக் கண்டுபிடிக்க அது சம்பந்தமான தொழில்நுட்பம் படித்தவர்களும் காவல் துறையில் பணிபுரிகின்றனர்.

சைபர் கிரைம் எனப்படும் இணைய வழியில் நடைபெறும் குற்றங்களைக் கண்டுபிடிக்க கணினி அறிவியல், இணையம் சம்பந்தமான படிப்புகளைப் படித்தவர்கள் காவல்துறையில் பணிபுரிவது போல குற்றங்களைக் கண்டுபிடிப்பதிலும் முக்கியப் பங்காற்றுபவர்கள் தடய அறிவியல் பிரிவைச் சேர்ந்தவர்களாவர்.

கொலை, திருட்டு போன்ற குற்றச் சம்பவங்கள் நடந்த இடத்தில் அதற்கான ஆதாரங்களைச் சேகரித்து தடய அறிவியல் பிரிவைச் சேர்ந்தவர்கள் கண்டுபிடிப்பார்கள். டிஎன்ஏ பரிசோதனை உள்ளிட்டவற்றையும் தடய அறிவியல் பிரிவினர் செய்வார்கள்.

தடய அறிவியல் பிரிவில் பணிபுரிவதற்கு சில குறிப்பிட்ட படிப்புகளைப் படித்திருக்க வேண்டும். அதில் ஆராய்ச்சி படிப்புகள், பட்டப்படிப்பு, முதுநிலை பட்டயப்படிப்பு, பட்டயப்படிப்பு, சான்றிதழ் படிப்புகள், குறுகிய கால படிப்புகள் என பல படிப்புகள் உள்ளன.

படிப்புகளின் வகைகள்

Forensic Science and Criminology

Forensic Entomology

Forensic Science and Fingerprint

Cell Phone Forensics (Mobile)

Questioned Documents and Handwriting Private Investigator (Detective)

Forensic Science and Document Examination

Forensic Science and Forensic Graphology

Document and Fingerprint Examination

Wildlife Forensics and Nature Conservation

Fingerprint Expert Crime Scene Investigation

Cyber Forensics, Cyber Crimes, Cyber Security & Cyber Law,

Disk Imaging and eDiscovery

Cyber Forensics

Cyber Law

Forensic Biotechnology and DNA Fingerprinting

Forensic Science and Cyber Forensics

Forensic Science and DNA Fingerprinting

Forensic Pharmacy (Pharmaceutical Jurisprudence)

படிப்பினை நடத்தும் சில முக்கிய கல்வி நிறுவனங்கள்

Lok Nayak Jayaprakash Narayan National Institute of Criminology & Forensic Science (LNJN NICFS), Delhi - http://www.nicfs.nic.in/

Bundelkhand University - JHANSI - https://www.bujhansi.ac.in/

index.aspx

Dr.Bhim Rao Ambedkar University- Agra - http://www.dbrau.org.in/

Amity Institute of Forensic Sciences - http:www.amity.edu

Osmania University, Hyderabad - http:www.osmania.ac.in

University of Madras - Chennai - http://www.unom.ac.in/

IFS INTERNATIONAL FORENSIC SCIENCES -http://www.ifs.edu.in/

ஆதாரம் : தினமணி – இளைஞர்மணி வார இதழ்