தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் விண்ணப்பதாரர்களின் குறைகளைத் தீர்க்கும் பொருட்டு குறை தீர்க்கும் மையம் 01.02.2012 அன்று தொடங்கப்பட்டது. அதன் பணிகள் பின்வருமாறு:

தொலைபேசி வாயிலாக

பொதுத் தொலைபேசி வாயிலாக விண்ணப்பதாரர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட பிரிவுகளுடன் தொடர்பு கொண்டு உடனுக்குடன் பதில் தெரிவிக்கப்படுகிறது. (இலவச அழைப்பு எண்: 1800 425 1002)

நேரடியாக

குறை தீர்க்கும் மையத்திற்கு நேரடியாக வரும் விண்ணப்பதாரர்களின் குறைகளைக் கேட்டறிந்து அதற்குண்டான படிவங்களைப் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அன்றைய தினமே பதில் அளிக்கப்படுகிறது.

அஞ்சல் வாயிலாக

அஞ்சல் மூலமாக வரும் விண்ணப்பதாரர்களின் கடிதங்கள் சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு. மூன்று தினங்களுக்குள் பதிலை மேற்படி பிரிவுகள் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைத்து விட்டு அதன் நகலை குறை தீர்க்கும் மையத்திற்கு வழங்கப்படுகிறது.

மின்னஞ்சல் வாயிலாக

மின்னஞ்சல் வாயிலாக வரும் கேள்விகளை சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு வழங்கப்பட்டு பதில் பெறப்பட்டு அன்றைய தினமே மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பதாரர்களுக்கு பதில் அளிக்கப்படுகிறது. (Email: contacttnpsc@gmail.com)

ஆதாரம் : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்