மத்திய மாநில அரசு பணிகளுக்கு தகுதியான பணியாளர்களை தேர்வு செய்ய நடத்தப்படும் போட்டி தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்களுக்கு துணை புரியும் நோக்கத்தில் மெய்நிகர் கற்றல் இணைய முகப்பு தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் உருவாக்கப்பட்டுள்ளது. மெய்நிகர் கற்றல் இணைய முகப்பு மத்திய மாநில அரசாங்க போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளம் ஆர்வலர்களுக்கு உதவும் நோக்கத்துடன் மெய்நிகர் கற்றல் இணைய முகப்பு (Virtual Learning Portal) என்னும் இணையதளத்தை தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை (Department of Employment and Training) உருவாக்கியுள்ளது. அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டல் மையங்களிலும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த இணைய முகப்பு, தொழில் வழிகாட்டல் மற்றும் பயிற்சியை முதன்மை செயல்பாடாகக் கொண்டுள்ள இந்தத் துறையின் மற்றொரு அங்கமாகும். TNPSC (குழு I, குழு II, குழு IV & குழு VIIB / VIII), TNUSRB, UPSC, SSC, IBPS, RRB ஆகிய தேர்வுகளுக்கான மின்–பாடக் குறிப்புகள் (e-content) இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. திட்டத்தின் நோக்கம் மையப்படுத்தப்பட்ட, இணைய அடிப்படையிலான மெய்நிகர் கற்றல் முறையை உருவாக்குவதும், மாணவர்கள் எந்த இடத்திலிருந்தும், எந்த நேரத்திலும் பல்வேறு மின்னணு சாதனங்கள் மூலம் கற்க ஏதுவான சூழலை உருவாக்குவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். பதிவு செய்யும் முறை சிறப்பு அம்சங்கள் தொலைதூர கிராமப்புற போட்டி ஆர்வலர்களும் பயன் பெறும் வகையில் இத்தளத்தில் மென் பாடக்குறிப்புகள் (e-content) தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் பதிவேற்றப்பட்டுள்ளன. மேலும், இத்தளத்தில் பதிவு செய்த பதிவுதாரர்கள் மென் பாடக்குறிப்புகளை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அதன் மூலம் இணைய வசதி இல்லாத சமயங்களிலும் அப்பாடங்களைக் கற்கலாம். மாதிரி தேர்வுகள் (Model Tests) மற்றும் மதிப்பீட்டு தேர்வுகள் (Assessment Tests) மூலம் மாணவர்களுக்கு பயிற்சியளிப்பதற்கான ஏற்பாடுகளும் இத்தளத்தில் உள்ளன. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையங்களில் நடத்தப்படும் இலவச பயிற்சி வகுப்புகளை அணுக முடியாத தொலைதூர பகுதிகளில் வசிக்கும் இளைஞர்களின் நலனுக்காக பயிற்சி வகுப்புகளின் காணொளிப் பதிவுகள் தினசரி இத்தளத்தில் பதிவேற்றப்படுகிறது. அரசுத் துறை வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய பணி காலியிடங்கள் பற்றிய விளம்பரங்கள், தேர்வுகள் பற்றிய அறிவிப்புகள் போன்றவை குறித்த விபரங்கள் இத்தளத்தில் முறையாகத் தெரிவிக்கப்படுகிறது. ‘Department of Employment and Training’ என்ற செயலியை தரவிறக்கம் செய்து அலைபேசியில் இத்தளத்தை உபயோகிக்க முடியும். அரசாங்க அதிகாரியாக வேண்டும் என்று முயற்சி செய்யும் ஆர்வலர்களின் கனவு நனவாக இத்தளம் வழிவகுக்கும். யூ டியூப் இணையதளம் இத்தளத்தில் உள்ள தேர்வு தயாரிப்பு பற்றிய ஒளிப்பதிவுகளையும், தொழில்நெறி வழிகாட்டல் பற்றிய ஏனைய காணொளிகளையும் tncareerservices employment என்ற யூ டியூப் சேனலில் அனைவரும் கண்டு பயனடையலாம். ஆதாரம்: மெய்நிகர் கற்றல் இணைய முகப்பு