இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டின் முக்கியத்துவம் இந்தியா அதன் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு முக்கிய கட்டத்தில் உள்ளது. செயற்கை நுண்ணறிவு ஒரு முக்கிய தூணாக உருவாகி வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, தொழில்நுட்பத்தின் ஜனநாயகமயமாக்கலுக்கும், அணுகல், உள்ளடக்கம், சமத்துவம் ஆகியவற்றை உறுதி செய்வதற்கும் செயற்கை நுண்ணறிவு தேசிய கருவியாக செயல்படுகிறது. இந்த தொழில்நுட்பப் புரட்சி, மனித முயற்சியின் ஒவ்வொரு களத்திலும் முன்னேற்றங்களுக்கு பரந்த வாய்ப்புகளைத் திறந்துள்ளது. உலகளாவிய தொழில்நுட்பம் மன்றங்களில் இந்தியாவின் பங்கு தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. இது வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்த சர்வதேச கொள்கையை வடிவமைப்பதில் இந்தியாவின் ஈடுபாட்டைப் பிரதிபலிக்கிறது. இந்த வளர்ந்து வரும் உலகளாவிய ஈடுபாட்டின் ஒரு பகுதியாக, இந்திய செயற்கை நுண்ணறிவுத் தாக்க உச்சி மாநாடு 2026 பிப்ரவரி 16 முதல் 20 வரை புது தில்லியில் நடைபெற உள்ளது. இது உலகளாவிய தெற்கு நாடுகளில் நடத்தப்படும் முதல் உலகளாவிய செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடாகும் . இந்த உச்சிமாநாடு அனைவருக்கும் நலன், அனைவருக்கும் மகிழ்ச்சி, மனிதகுலத்திற்கான செயற்கை நுண்ணறிவு என்ற தொலைநோக்குப் பார்வையை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படுகிறது. இது உலகளாவிய தொழில் துறைத் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், நிபுணர்களை ஒன்றிணைத்து நிர்வாகம், நிலையான வளர்ச்சி ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டை வரையறுக்க உதவும். மூன்று அடிப்படைத் தூண்கள் இந்த உச்சி மாநாடு மூன்று அடிப்படைத் தூண்களை மையமாக கொண்டதாகும். மக்கள், பூமி, முன்னேற்றம் என்பவையே அவை. இதில் 15 முதல் 20 அரசுத் தலைவர்கள், 50-க்கும் மேற்பட்ட நாடுகளின் அமைச்சர்கள், 40க்கும் மேற்பட்ட தலைமைச் செயல் அதிகாரிகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உச்சிமாநாடு இந்தியாவை உலகளாவிய செயற்கை நுண்ணறிவு ஒத்துழைப்பில் ஒரு ஒருங்கிணைப்பாளராக நிலைநிறுத்தும். உலகளாவிய ஒத்துழைப்பிற்கான கருப்பொருள்கள் உச்சி மாநாட்டின் கலந்துரையாடல்களுக்காக, ஏழு கருப்பொருள்கள் கொண்ட சக்கரங்கள் (Chakras) அல்லது பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சக்கரமும் செயற்கை நுண்ணறிவின் (AI) தாக்கத்திற்கான ஒரு முக்கிய துறையில் கவனம் செலுத்தும். செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை வடிவமைக்க, உலகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த பணிக்குழுக்களில் ஈடுபட்டுள்ளன. மனித மூலதனம் சமூக அதிகாரமளிப்பிற்கான உள்ளடக்கம் பாதுகாப்பான மற்றும் நம்பகமான செயற்கை நுண்ணறிவு அறிவியல் மீட்புத்திறன், புதுமை மற்றும் செயல்திறன் அனைவரும் அணுகக்கூடிய செயற்கை நுண்ணறிவு வளங்கள் பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக நலனுக்கான செயற்கை நுண்ணறிவு இந்தச் சக்கரங்கள் மூலம், உள்ளூர் சவால்களை எதிர்கொள்ளும் போதே உலகளாவிய AI நெறிமுறைகளை வடிவமைப்பதே இந்தியாவின் நோக்கமாகும். உச்சி மாநாட்டின் முடிவுகள், வரும் ஆண்டுகளில் கொள்கை நிர்ணயர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் தலைவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும். மேலும் ததகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2225069®=3&lang=1 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்