இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு தீர்வுகளைக் கட்டமைக்க ஐஐடிஎம் பிரவர்தக் மற்றும் சர்வம் ஏஐ இடையிலான கூட்டாண்மை மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் பல்வேறு தொழில்துறைகளுக்காக செயற்கை நுண்ணறிவு தீர்வுகளைக் கட்டமைக்க ஐஐடிஎம் பிரவர்தக் (IITM Pravartak) தொழில்நுட்ப அறக்கட்டளையும், சர்வம் ஏஐ (ஆக்சன்வைஸ் தனியார் நிறுவனம்)[Sarvam AI (Axonwise Private Limited)] ஆகியவை இணைந்து செயல்பட உள்ளன. இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு சூழலின் முன்னோடியாகத் திகழும் இரண்டு நிறுவனங்களின் வலிமைகளை ஒருங்கிணைக்கும் இந்தக் கூட்டாண்மை, தொழில்நுட்பத் தற்சார்பை நோக்கிய இந்திய பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாக அமைகிறது. இந்தக் கூட்டு முயற்சி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஐஐடிஎம் பிரவர்தக் தொழில்நுட்ப அறக்கட்டளை, சர்வம் ஏஐ இடையே அண்மையில் கையெழுத்தானது. இந்தியா தமது தேசிய செயற்கை நுண்ணறிவு செயல்திட்டத்தை விரைவுபடுத்தி வரும் நிலையில், இந்திய மொழிகளைப் புரிந்துகொள்ளும், இந்தியச் சூழல்களைப் பிரதிபலிக்கும் மற்றும் இந்தியக் கட்டமைப்புகளிலேயே இயங்கும் செயற்கை நுண்ணறிவு அமைப்புகளுக்கான தேவை முன்னெப்போதையும் விட தற்போது மிக அதிகமாக உள்ளது. இந்தியாவிற்காகவே அடிப்படையிலிருந்து கட்டமைக்கப்பட்ட, பலமொழி சார்ந்த செயற்கை நுண்ணறிவு தீர்வுகள் மற்றும் விரிவாக்கக்கூடிய செயற்கை நுண்ணறிவு கட்டமைப்புகளை உருவாக்குவதன் மூலம், சர்வம் ஏஐ நிறுவனம் இத்துறையில் ஒரு முன்னணி சக்தியாக உள்ளது. இந்திய மொழிகள் மற்றும் சூழல்களுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பலமொழி மொழி மாதிரிகள், உரையாடல் சார்ந்த செயற்கை நுண்ணறிவு மற்றும் பேச்சுத் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட, இந்தியாவை மையமாகக் கொண்ட அடிப்படை செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை உருவாக்கும் தமது நிபுணத்துவத்தை இந்தக் கூட்டாண்மைக்கு வழங்குகிறது. மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2252173®=3&lang=2 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்