காவல்துறைக் கலைச்சொற்கள் ஆங்கிலச் சொற்கள் தமிழ் கலைச்சொற்கள் Patrol சுற்றுக்காவல் Patron புரவலர் Court Summon நயன்மன்ற அழைப்பாணை Bail பிணை Cyber Crime இணையதளக் குற்றம் Traffic Inspector போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் Surety பிணையம் Police Manual காவல் கையேடு Arrest Warrant பிடியாணை Warrantor நம்புறுதி அளிப்பவர் Warrant Case பெருங்குற்ற வழக்கு Police Force காவற்படை Police Gazette காவல் அரசிதழ் Police Recruit School காவலர் பயிற்சிப் பள்ளி Police Torture காவல் வதை Police Quarters காவலர் குடியிருப்பு Police Orderly காவல் ஏவலர் Police Guard காவலர் காப்பு Accuse குற்றச்சாட்டு Mobile Police Station செல்லிடக்காவல் நிலையம் Wrongful Confinement முறையற்ற சிறைவைப்பு Sub Jail சார் சிறை Stay Order தடுப்பு ஆணை Police Custody காவல் வயப்பாடு Police Investigation காவல் புலனாய்வு Air Gun காற்றழுத்தத் துமுக்கி Back sight துமுக்கி பின் குறி நோக்கி Discharge Lamp மின்னிறக்க விளக்கு Inspection Lamp ஆய்வு விளக்கு Firing Pin Mark சுடும் ஊசிக் குறி Indicator Lamp அறிகுறி விளக்கு Hand Grenade கையெறி குண்டு Investigation புலன் உசாவல் (விசாரணை) Light Vehicle இலகு ஊர்தி Machine Gun இயந்திரத் துமுக்கி Moving Beats நகரும்முறைக் காவல் Night Round இரவுச் சுற்றுக் காவல் Pedestrian Crossing நடப்பவர்கள் கடக்குமிடம் Photo Micrograph நுண் பெருக்க ஒளிப்படம் Physical Evidence தடயப்பொருள் Pickup Van சிறு மூடுந்து Pistol கைத் துமுக்கி Punctuation Marks நிறுத்தக் குறியீடுகள் Signboard வழிகாட்டிப் பலகை Signal Lamp சைகை விளக்கு Sound Horn ஒலி எழுப்புக Striking Velocity தாக்கத் திசைவேகம் Traffic Chart போக்குவரத்து விளக்கப்படம் Traffic Congestion போக்குவரத்து நெரிசல் Traffic Signal போக்குவரத்து சைகை ஆதாரம்: சொல்வயல்