கீழடி புனை மெய்யாக்க செயலி கீழடி அருங்காட்சியகத்திற்காக பிரத்தியேகமாக கீழடி புனை மெய்யாக்க செயலியை (Keeladi Augmented Reality App) தமிழ்நாடு தொல்லியல் துறை உருவாக்கியுள்ளது. கீழடி அகழாய்வுகளில் வெளிக்கொணரப்பட்டுள்ள 200 தொல்பொருட்களை AR மற்றும் 3D முப்பரிமாணத்தில் பார்க்கலாம். 3D மற்றும் AR Viewer மூலம் கலைப்பொருட்கள் பற்றிய தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். உலகில் எங்கிருந்தும் காணும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் தங்களின் கைபேசி வாயிலாகவே அகழாய்வுக் குழி மற்றும் தொல்பொருட்களைப் பார்வையிடும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. கீழடியின் வரலாற்றைப் பற்றிய ஆழமான புரிதலை அருங்காட்சியகத்தின் ஒவ்வொரு கட்டங்களிலும் வைக்கப்பட்டுள்ள QR குறியீடுகளை ஸ்கேன் செய்து பெறலாம். கீழடி AR செயலி கீழடி பண்பாட்டுப் பெருமைகளை உலகளவில் பறைசாற்றும் வகையிலும், அனைவரையும் ஈர்க்கக்கூடியதாகவும், கல்வியறிவு பெறும் வகையிலும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களின் அறிவியல் பகுப்பாய்வு முடிவுகள் வாயிலாக தமிழர்களின் வளமான பண்பாட்டு மரபுகள் நிரூபிக்கப்பட்டு வருகின்றன. வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை 9