இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் 73,732 கல்வெட்டுகளை நகலெடுத்துள்ளது இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் 73,732 கல்வெட்டுகளை நகலெடுத்துள்ளதாகவும், அவற்றில் 26,416 கல்வெட்டுகள் தமிழ் எழுத்துகளில் உள்ளதாகவும் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் எபிகிராஃபியா இண்டிகா மற்றும் தென்னிந்திய கல்வெட்டுகளின் பல பாகங்களை வெளியிட்டுள்ளது. கடைசியாக எபிகிராஃபியா இண்டிகாவின் பாகம் 2012-ல் வெளியிடப்பட்டுள்ளது. தென்னிந்திய கல்வெட்டுகள் 2025-ல் வெளியிடப்பட்டுள்ளது. தென்னிந்திய கல்வெட்டுகளின் 45 பாகங்களில் 18 பாகங்கள் சுதந்திரத்திற்கு முன்பும், எஞ்சிய 27 பாகங்கள் சுதந்திரத்திற்குப் பிறகும் வெளியிடப்பட்டுள்ளது. ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்