தமிழ்நாட்டில் கல்வெட்டுகள் படி எடுத்தலில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தமிழ்நாட்டில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த 412 பழங்கால தொல்லியல் நினைவுச் சின்னங்களும் தலங்களும் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் பராமரிப்பில் உள்ளன. அவற்றின் பராமரிப்புக்கான வருடாந்திர திட்டங்களை வகுப்பதற்கு அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது, 24,806 தமிழ் கல்வெட்டு பிரதிகளில், 13,246 பிரதிகள் மைசூரில் உள்ள படி எடுத்தல் அலுவலக கிளையிலிருந்து சென்னை கிளைக்கு மாற்றப்பட்டுள்ளன. 13,740 கல்வெட்டுப் பிரதிகளை படி எடுத்து ஸ்கேன் செய்யும் பணி முடிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டுகள் ஆய்வுத் துறையின் வருடாந்திர அறிக்கை, தென்னிந்திய கல்வெட்டுத் தொகுதிகள், கல்வெட்டுத் துறையின் தொகுப்புகள் போன்ற கல்வெட்டுத் துறையின் வெளியீடுகளில் இவை குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த தொகுப்புகள் இந்திய தொல்லியல் துறையின் நூல் விற்பனையகங்களில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்