எம்ஆர்என்ஏ அடிப்படையிலான ஓமிக்ரான் பூஸ்டர் தடுப்பூசி பயோடெக்னாலஜி துறை [Department of Biotechnology (DBT)] மற்றும் பயோடெக்னாலஜி இண்டஸ்ட்ரி ரிசர்ச் அசிஸ்டன்ஸ் கவுன்சில் [Biotechnology Industry Research Assistance Council (BIRAC)] ஆகியவற்றின் நிதியுதவியுடன், ஜெனோவாவின் (Gennova) உள்நாட்டு இயங்குதள தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தியாவின் முதல் எம்ஆர்என்ஏ அடிப்படையிலான ஜெம்கோவாக்®-ஓஎம் (mRNA vaccine GEMCOVAC®-OM) என்னும் ஓமிக்ரான் பூஸ்டர் தடுப்பூசியை (Omicron-specific mRNA-based booster vaccine) உருவாக்கியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு, இந்தத் தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்திற்கு இந்திய மருந்து தலைமை கட்டுப்பாட்டாளர் அலுவலகத்திலிருந்து [Drug Control General of India (DCGI) for Emergency Use Authorization (EUA)] அனுமதி கிடைத்தது. தற்சார்பு இந்தியா 3.0 இன் ஒரு பகுதியாக, திறமையான, மலிவு மற்றும் அணுகக்கூடிய உள்நாட்டு கோவிட் 19 தடுப்பூசிகளை நாட்டின் குடிமக்களுக்கு விரைவில் கொண்டு வரும் நோக்கத்துடன் பாதுகாப்பு மிஷன் தொடங்கப்பட்டது. GEMCOVAC®-OM, கோவிட் பாதுகாப்பு மிஷன் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட ஐந்தாவது தடுப்பூசி ஆகும். இந்தத் தடுப்பூசி ஊசி இல்லாமல் உள்-தோலுக்கு வழங்கப்படுகிறது. பங்கேற்பாளர்களில் இது அதிக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கியது ஆய்வில் கண்டறியப்பட்டது. ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்