சூரிய ஒளிவட்டத்தின் உயர் வெப்பநிலைக்கு விடைகாண புதிய ஆய்வு வழிவகுக்கிறது சூரியனின் வெளிமண்டலத்தில் மறைந்திருக்கும் அதிர்வுகளைக் கண்டறியும் ஒரு புதுமையான வழிமுறை, கண்ணுக்குத் தெரியும் சூரியனின் மேற்பரப்பை விட ஒளிவட்டம் ஏன் மிகவும் வெப்பமாக இருக்கிறது என்ற நீண்டகால கேள்விக்கு விஞ்ஞானிகள் புதிய புரிதல்களைப் பெற உதவக்கூடும். .. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமான நைனிடாலில் உள்ள ஆர்யபட்டா வானியல் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம், தில்லி ஐஐடி ஆகியவை அண்மையில் நடத்திய ஓர் ஆய்வில், இந்தக் கேள்வியை ஆராய்வதற்காக, முன்னோக்கு மாதிரியாக்கத்துடன் இணைந்த மேம்பட்ட முப்பரிமாண காந்த-நீரியல் உருவகப்படுத்துதல்கள் பயன்படுத்தப்பட்டன. ஆர்யபட்டா வானியல் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவி செல்வி அம்பிகா சக்ஸேனா, தில்லி ஐஐடி-யின் இயற்பியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் வைபவ் பந்த் ஆகியோர், அதன் குறுக்குவெட்டுப் பகுதி முழுவதும் அடர்த்தி சீரற்ற தன்மைகளைக் கொண்ட ஒரு திறந்தவெளி கரோனல் பகுதியின் உருவகப்படுத்தல்களை மேற்கொண்டனர். கீழ் எல்லையில் குறுக்கு அலைகள் செலுத்தப்பட்டு, கட்டமைக்கப்பட்ட காந்தப்புலத்தின் வழியே மேல்நோக்கிப் பரவ அனுமதிக்கப்பட்டன. பின்னர், முன்னோக்கு மாதிரியாக்கத்தைப் பயன்படுத்தி, பொதுவாகக் காணப்படும் கரோனல் நிறமாலை வரியான எஃப்இ XIII 10749 ஏ-யில் பிளாஸ்மா உமிழ்வு எவ்வாறு தோன்றும் என்பதை அவர்கள் கணக்கிட்டனர். முக்கியமாக, குறுக்கு அலை இயக்கவியல், குறுக்குவெட்டு சீரற்ற தன்மைகள், அலையால் இயக்கப்படும் அதிர்வுகளின் போக்கு ஆகியவற்றின் ஒருங்கிணைந்த விளைவுகளால் இந்த சமச்சீரற்ற தன்மைகள் இயற்கையாகவே எழுகின்றன. உருவகப்படுத்தப்பட்ட சமச்சீரற்ற தன்மைகள், கோட்டின் உச்ச தீவிரத்தில் சுமார் 20 சதவீதம் வரை அடையலாம். மேலும் இரண்டாம் நிலை திசைவேகங்கள் 30 முதல் 40 கிமீ ⁻¹ வரை இருக்கும். மாறி மாறி வரும் சிவப்பு-நீல வடிவமானது, அலையின் வேகத்திற்கு இணக்கமான வேகத்தில் வெளிப்புறமாகப் பரவுகிறது. பரவும் குறுக்கு காந்த நீரியல் அலைகள் மட்டுமே முறையான, மாறி மாறி வரும் நிறமாலை சமச்சீரின்மைகளை உருவாக்க முடியும் என்பதை இந்த முடிவுகள் நிரூபிக்கின்றன. டிகேஐஎஸ்டி போன்ற சூரிய தொலைநோக்கி வசதிகளிலிருந்து இப்போது கிடைக்கும் உயர் இடஞ்சார்ந்த மற்றும் நிறமாலைத் தெளிவுத்திறனுடன், இந்த நிகழ்வின் கணிப்புகள் விரைவில் சாத்தியமாகலாம். இது சூரிய ஒளிவட்டத்தில் அலைகளால் இயக்கப்படும் இயக்கவியலுக்கான ஒரு புதிய கண்டறிதலை வழங்கும். மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2263244®=3&lang=1 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்