புற்றுநோய், நரம்பியல் நோய் பாதிப்புக்களைக் கண்டறிவதை எளிதாக்கக்கூடிய தொழில்நுட்பம் பிளவுபடக்கூடிய ஒளியால் அழிக்கப்படும் எதிர்ப்பொருள் குறிப்பான் (கிளியர்) [Cleavable Light-Erased Antibody Reporter (CLEAR)] எனப்படும் ஒரு புதிய படமாக்கல் தளம், ஒரே ஒரு ஒளிரும் குறிப்பானைப் பயன்படுத்தி, ஒரே உயிரியல் மாதிரியில் முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையிலான புரதங்களைக் காட்சிப்படுத்த ஆராய்ச்சியாளர்களுக்கு உதவிடும். இது, உடலில் உள்ள செல்கள், திசுக்கள் முழுவதும் உயர் தெளிவுத்திறன் கொண்ட, பல்முனைப் படமாக்கலுக்கான, புதிய சாத்தியக்கூறுகளை வெளிப்படுத்தும். இது நோய் பாதிப்பைக் கண்டறிதல், உயிரியல் ஆராய்ச்சிக்கு முக்கியதத்துவம் வாய்ந்ததாக அமையும். உடலில் உள்ள புரதங்கள் உயிரியல் செயல்பாட்டின் முதன்மை ஒருங்கிணைப்பாளர்களாகும். மேலும், அவை சிகிச்சைக்கான முக்கிய இலக்குகளாகவும், நோய் கண்டறிதலுக்கான முக்கிய குறிப்பான்களாகவும் இருக்கின்றன. ஒரு திசு மாதிரியின் விரிவான புரத வரைபடம், ஒவ்வொரு புரதத்தின் அடையாளத்தையும் அதன் இயல்பான சூழலில் உள்ள துல்லியமான அமைப்பையும் படம் எடுப்பது, புற்று நோய் பாதிப்புக்களைக் கண்டறிவதற்கும், சிக்கலான நரம்பியல் சார்ந்த பாதிப்புகள் குறித்து புரிந்துகொள்வதற்கும், நோயியல் நிபுணர்களுக்கு பெரும் உதவிகரமாக இருக்கும். இருப்பினும், அதிக எண்ணிக்கையிலான புரதங்களை, அவற்றின் இயல்பான இடம் சார்ந்த சூழலில் வரைபடமாக்குவது பெரும் சவாலான பணியாக இருந்து வருகிறது. மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2265421®=3&lang=2 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்