செயல்தாள் 1 - கற்றல் திறன்களை வளர்த்துக் கொள்வது எப்படி? பயிற்சியும் முயற்சியும் இருந்தால் மட்டுமே திறன்களை வளர்த்துக் கொள்ள இயலும். சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டது எப்படி?படம் வரையக் கற்றுக் கொண்டது எப்படி? பயிற்சி, முயற்சி, ஆர்வம், கற்றுக்கொள்ள வேண்டும் என்ற உந்துதல். இவற்றைப் பயன்படுத்தி நமக்கு பயத்தைத் தரக்கூடிய ஆங்கிலத்தை வென்றெடுக்க ஒரு பயிற்சி செய்யலாமா? ஆங்கிலம் நன்கு தெரிந்தவர் உதவியுடன் தினமும் 5 புதிய சொற்களைத் தேர்ந்தெடுக்கவும். அவர்களிடம் அந்த சொற்களின் உச்சரிப்பு, பொருள், வாக்கியத்தில் பயன்படுத்துவது பற்றி கேட்டு தெரிந்துகொண்டு பயிற்சி செய்யவும். 5 புது சொற்களையும் ஒரு அட்டையில் எழுதி அடிக்கடி கண்ணில்படும் இடத்தில் தொங்க விடவும். உங்கள் நோட்டில் பதிவு செய்யவும். முதல் நாள் கற்றுக்கொண்ட 5 சொற்கள் பத்து நாட்களுக்குப் பிறகு எனக்கு நன்கு அறிமுகமான சொற்கள் ஒரு மாதத்தில் எனக்கு நன்கு தெரிந்த சொற்கள் ஒரு குறிப்பிட்ட பாடத்தை எடுத்துக்கொண்டு வாய்விட்டுப் படியுங்கள். பிறகு அந்தப் பாடத்தைப் பார்த்து எழுதுங்கள். யாரையாவது படிக்கச் சொல்லிக் கேட்டு எழுதுங்கள். அந்தப் பாடம் உங்களுக்குச் சரியாகப் புரிந்ததா என்று பார்க்க நீங்களே மாதிரி வகுப்புகள் எடுக்கலாம். இந்த செயல்பாட்டைச் செய்தால், பாடம் நன்கு புரியும், எழுத்துப் பிழையின்றி எழுதவரும், தேர்வுகளில் வேகமாகவும், அதே சமயம் தெளிவாகவும் எழுதுவதற்கான தேர்ச்சி வரும். செயல்தாள் 2 - உறவுகளைப் புரிந்துகொள்ளுதல் வாழ்க்கையில் நீங்கள் முக்கியமாக நினைக்கும் 25 நபர்களின் பெயர்களை எழுதவும். அதிலிருந்து 15 நபர்களைத் தேர்ந்தெடுக்கவும். அந்தப் பட்டியலிலிருந்து மிக முக்கியமான ஐந்து நபர்களைத் தேர்ந்தெடுக்கவும். முதலில் தேர்ந்தெடுத்த 25 நபர்களை ஏன், எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள்?_________________________________________________________________________________________________________________________________ அதிலிருந்து 10 நபர்களை விட்டுவிட்டு 15 நபர்களைத் தேர்ந்தெடுத்தற்கான காரணங்கள் என்ன?_________________________________________________________________________________________________________________________________ இறுதிப் பட்டியலில் 5 நபர்களைத் தேர்ந்தெடுத்தது சுலபமாக இருந்ததா?_________________________________________________________________________________________________________________________________ எவற்றின் அடிப்படையில் நபர்களைத் தேர்ந்தெடுத்தீர்கள்? அவர்களின் பண்புகளுக்காகவா?திறமைக்காகவா? அவர்களுக்கும் உங்களுக்கும் இருக்கும் உறவின் நெருக்கத்தின் அடிப்படையிலா?_________________________________________________________________________________________________________________________________ ஏன் அவர்களை உங்கள் வாழ்க்கையில் முக்கியமானவர்களாகக் கருதுகிறீர்கள்?_________________________________________________________________________________________________________________________________ செயல்தாள் 3 - எவை திறன்கள்! எவை பண்புகள்! கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் எவை திறன்கள், எவை பண்புகள் என்று பிரித்து எழுதவும். படிக்கும் இடத்தில், வேலைத்தளத்தில் சிறந்த ஆளுமை உடையவராக, நற்குணங்கள் உள்ளவராக செயல்பட, மேலும் எந்தத் திறன்கள் / பண்புகள் தேவை என எழுதவும். இதே போல் உங்களை உற்சாகமாக வைத்துக்கொள்ளத் தேவைப்படும் கூடுதல் பண்புகளையும், திறன்களையும் எழுதவும். வாகனங்களை சரி பார்த்தல் சைக்கிள் ஓட்டுதல் அன்போடு இருத்தல் கிரிக்கெட் விளையாடுதல் நடனமாடுதல் நேரம் தவறாமை பொய் பேசாதிருத்தல் இசைக்கருவி இசைத்தல் எதிர்த்து பேசாது இருத்தல் நேர்மையாக இருத்தல் என்னுடைய பட்டியல் பண்புகள் திறன்கள் கற்றதும் பெற்றதும் செயல்தாள் 1: கற்றல் திறனை மேம்படுத்திக் கொள்வது பற்றி அறிந்துகொள்வார்கள். செயல்தாள் 2: மாணவர்கள் உறவுகளைப் பற்றி புரிந்துகொள்வார்கள். செயல்தாள் 3: வாழ்க்கைக்குத் திறன்கள், நற்பண்புகளும் இரண்டுமே அவசியம் என்பதைத் தெரிந்து கொள்வார்கள். ஆதாரம்: நான் முதல்வன்