கற்றல் நோக்கம் பள்ளிகளில் இருந்து உயர்கல்விக்கு போவதற்கு முன் நாம் சேகரிக்க வேண்டிய சான்றிதழ்கள் பற்றித் தெரிந்துகொள்ளுதல். முக்கியச் சான்றிதழ்கள் உயர்கல்விக்கு விண்ணப்பிக்கும் போது மாணவர்கள் வைத்திருக்க வேண்டிய முக்கியச் சான்றிதழ்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (Mark Sheet) பதினொன்றாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (Mark Sheet) பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (Mark Sheet) மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate) சாதிச் சான்றிதழ் (Community Certificate) ஆதார் அடையாள அட்டை (Aadhar Card) வருமானச் சான்றிதழ் (Income Certificate) விளையாட்டுச் சான்றிதழ்கள் (Sports Certificates) இருப்பிடச் சான்றிதழ் (Nativity Certificate) முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுச் சான்றிதழ் (If Applicable) இலங்கைத் தமிழ் அகதி என்பதற்கான சான்றிதழ் (If Applicable) முதல் தலைமுறை பட்டதாரிச் சான்றிதழ் (If Applicable) மாற்றுத்திறனாளி என்பதற்கான சான்றிதழ் (If Applicable) கல்விக் கடன் கல்லூரியில் மாணவர் சேர்க்கை பெற்ற பிறகே, கல்விக் கடன் பெறுவதற்கு வங்கிகளில் விண்ணப்பிக்க முடியும். ஆனால், அதற்குத் தேவையான ஆவணங்களை முன்னதாகத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கல்விக் கடன் பெறுவதற்கு வித்யாலட்சுமி வலைத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு, வங்கிக்கணக்கு, பான் கார்டு (Pan Card), ஆதார் அடையாள அட்டை (Aadhar Card), வருமானச் சான்றிதழ் உள்ளிட்டவை தேவைப்படும். மேலும் விவரங்களுக்கு www.vidyalakshmi.co.in வலைத்தளத்தைப் பார்க்கவும். ஆதாரம்: நான் முதல்வன்