ஆசிரியர்களுக்கான குறிப்புகள் வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களையும் உயர்கல்வி தொடர்பான தகவல்களைத் திரட்ட ஊக்குவிப்பதோடு, அதைப் பகிரவேண்டியதன் அவசியத்தைப் பற்றியும் எடுத்துச் சொல்லலாம். சான்றிதழ்களைப் பெறுவதில் மாணவர்களுக்குப் பிரச்சினைகள் இருந்தால், தகுந்த முறையில் வழி காட்டலாம். கல்விக் கடன்களைப் பெற எந்த வங்கிகளில் போய், யாரை எப்படிப் பார்ப்பது, தேவைப்படும் ஆவணங்கள் எவை? அவற்றை எப்படித் திரட்டுவது என்பது பற்றி மாணவர்களை வழிநடத்தினால் சிறப்பாக இருக்கும். ஆதாரம்: நான் முதல்வன்