தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை அண்ணா பல்கலைக்கழகம், சென்னை திருவள்ளுவர் பல்கலைக்கழகம், வேலூர் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம் அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் பெரியார் பல்கலைக்கழகம், சேலம் மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், கொடைக்கானல் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், நாகப்பட்டினம் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், சென்னை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், சென்னை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகம், சென்னை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், சென்னை தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம், சென்னை தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், சென்னை (இது தவிர, பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்ட அரசுக் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், தன்னாட்சிக் கல்லூரிகள் மற்றும் சுயநிதிக் கல்லூரிகளும் உள்ளன.) கிண்டி பொறியியல் கல்லூரி 1794ஆம் ஆண்டு மே 17ஆம் தேதி சென்னையில் தொடங்கப்பட்ட சர்வே பள்ளி, அடுத்த ஆண்டே சிவில் இன்ஜினியரிங் பள்ளியாக மாறியது தொடக்கத்தில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இயங்கிய சர்வே பள்ளி, பின்னர் 1859இல் தற்போது சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் உள்ள கலச மஹால் கட்டடத்தில் சிவில் கல்லூரி என்ற பெயருடன் இயங்கியது. அங்கிருந்து 1920இல் தற்போதுள்ள கிண்டி வளாகத்திற்கு இடம்பெயர்ந்தது அதுதான் தற்போதுள்ள கிண்டி பொறியியல் கல்லூரி. ஆதாரம்: நான் முதல்வன்