நிதிச்சுமையால் உயர்கல்வி கற்பதில் சிரமம் தெலங்கானா மாநிலம், சித்திபெட் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜு (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 36 வயதான இவர் தற்போது முனைவர் பட்டப் படிப்பு பயின்று வருகிறார். நிதிச்சுமை காரணமாக இவருக்கு உயர்கல்வி கற்கும் சூழல் மிகவும் சிரமாக இருந்தது. இந்நிலையில், சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும், பட்டியலின மாணவர்களுக்கான தேசிய கல்வி உதவித்தொகை திட்டத்தில் விண்ணப்பித்திருந்தார். நிதிச்சுமையைக் குறைத்த தேசிய கல்வி உதவித்தொகை இதைத்தொடர்ந்து, ராஜுவுக்கு 2022 நவம்பர் மாதம் முதல் தேசிய கல்வி உதவித்தொகை [National Fellowship for Scheduled Caste Students (NFSC) Scheme] வழங்கப்பட்டு வருகிறது. கல்வி உதவித்தொகையாக ரூ.15 லட்சம் வழங்கப்பட்ட நிலையில், அவர் தனது முனைவர் பட்டப் படிப்பை எவ்வித சிரமும் இன்றி படித்து வருகிறார். உதவிப் பேராசிரியர் அல்லது குரூப்- 1 அதிகாரியாக வேண்டும் என்ற விருப்பம் கொண்ட ராஜு அதற்கான முயற்சியையும் எடுத்து வருகிறார். தேசிய கல்வி உதவித்தொகையானது ராஜுவின் நிதிச் சுமையை வெகுவாக குறைத்ததுடன், ஆராய்ச்சி, திறன் மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தவும் உதவிகரமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2340349®=48&lang=2 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் அலுவலகம்