கடினமான குடும்பச் சூழல் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 33 வயதானவர் டாக்டர் சாஹா. தந்தை மறைவுக்குப் பிறகு இவருடைய குடும்பம் கடினமான நிதிச் சிக்கலை எதிர்கொண்டது. உரிய தருணத்தில் கிடைத்த கல்வி உதவித்தொகை இந்நிலையில் 2018 முதல் 2022-ம் ஆண்டு வரை அவரது எம்ஃபில், பிஎச்டி படிப்புகளைத் தொடர தேவையான நிதியை பட்டிலியன மாணவர்களுக்கான தேசியக் கல்வி உதவித்தொகை வழங்கியது. இந்த உதவித்தொகை நிதிச்சுமையைக் குறைத்து அவருக்கு ஆராய்ச்சியில் கவனம் செலுத்த உதவியது. தொடர் நிதி ஆதரவு, விடாமுயற்சி, கடின உழைப்பு ஆகியவற்றின் மூலம் டாக்டர் சாஹா முனைவர் பட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார். தற்போது டாக்டர் அனிக் சாஹா மேற்கு வங்கத்தின் பஸ்சிம் பர்தமான் மாவட்டத்தின் அசன்சோலில் உள்ள காஸி நஸ்ருல் பல்கலைக்கழகத்தில் இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி குழுமத் திட்டத்தின் கீழ், ஆராய்ச்சி உதவியாளராக பணியாற்றி வருகிறார். உரிய தருணத்தில் கிடைக்கும் கல்வி உதவித்தொகை விளிம்பு நிலை சமூகங்களைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தங்களுடைய படிப்பை தொடரவும், ஆராய்ச்சியை நிறைவு செய்யவும் உதவுகிறது. மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2312985®=48&lang=1 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் அலுவலகம்