இந்திய கடல்சார் பல்கலைக்கழக புத்தொழில்முனைவு ஆராய்ச்சி மையம் இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் [Indian Maritime University (IMU)] சென்னையில் உள்ள அதன் தலைமையகத்தில் இந்திய கடல்சார் பல்கலைக்கழக புத்தொழில்முனைவு ஆராய்ச்சி மையத்தை [IMU Start-up Entrepreneurship Accelerator Setup (IMU I-SEAS)] ஜூலை 15, 2026 அன்று தொடங்கியது. இம்மையம் இந்தியாவின் கடல்சார் கண்டுபிடிப்பு மற்றும் புத்தொழில் நிறுவன சூழலமைப்பை வலுப்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும். கடல்சார் புத்தாக்க மையத்தின் நோக்கம் புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த கடல்சார் புத்தாக்க மையம் (Maritime Innovation Hub) மாணவர்கள், கடல்சார் துறை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வளரும் தொழில்முனைவோர் மத்தியில் கடல்சார் கண்டுபிடிப்பு, தொழில்முனைவு மற்றும் நிறுவன மேம்பாட்டை வளர்ப்பதற்கான ஒரு பிரத்யேக தளமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதும், தொழில்துறை சவால்களுக்கு புதுமையான தீர்வுகளை ஊக்குவிப்பதும், மாலுமிகள், துறைமுக வல்லுநர்கள், தொழில்துறை பங்குதாரர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி அமைப்புகளுக்கிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவது இதன் நோக்கமாகும். மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2284904®=48&lang=2 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்