இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகங்கள் பல்துறை (Interdisciplinary) அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சியை ஒருங்கிணைக்கவும், மேம்படுத்தவும் பெர்ஹாம்பூர், போபால், கொல்கத்தா, மொஹாலி, புனே, திருவனந்தபுரம் மற்றும் திருப்பதி ஆகிய இடங்களில் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகங்கள் [Indian Institutes of Science Education and Research (IISERs)] இந்திய அரசால் நிறுவப்பட்டன. பல ஆண்டுகளாக இந்தக் கல்வி நிறுவனம் திறமையான மாணவர்களை வெற்றிகரமாக ஈர்த்து வருகிறது. மாணவர்களை அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபடுத்தி சமூகப் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளைக் கண்டுபிடித்து தேசத்தை வடிவமைக்க உதவுவதே இந்தக் கல்வி நிறுவனத்தின் முக்கிய குறிக்கோளாகும். படிப்புப் பிரிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள படிப்புப் பிரிவுகளில் பி.எஸ். - எம்.எஸ். (B.S. - M.S.) மற்றும் பி.எஸ். (B.S.) (IISER போபாலில் மட்டும்) ஆகிய பட்டப்படிப்புகள் வழங்கப்படும். Biological Sciences Chemical Sciences Earth & Climate Sciences/Earth & Environmental Sciences Economic Sciences Engineering Sciences (Chemical Engineering, Data Science & Engineering, Electrical Engineering & Computer Science) Geological Sciences Integrated & Interdisciplinary Sciences (Biological Sciences, Chemical Sciences, Data Sciences, Mathematical Sciences, Physical Sciences) Mathematical Sciences Physical Sciences விண்ணப்பிக்கத் தகுதிகள் விண்ணப்பதாரர்கள் 2024 அல்லது 2025 ஆம் ஆண்டில் அறிவியல் பிரிவில் பன்னிரெண்டாம் வகுப்பு (அல்லது அதற்கு சமமான) தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்கள் பன்னிரெண்டாம் வகுப்பு (அல்லது அதற்கு சமமான) தேர்வில் உயிரியல், வேதியியல், கணிதம் மற்றும் இயற்பியல் ஆகியவற்றில் குறைந்தது மூன்று பாடங்களைப் படித்திருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள் (SC/ST/PwD) பன்னிரெண்டாம் வகுப்பு (அல்லது அதற்கு சமமான) தேர்வில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். மற்ற பிரிவுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு (அல்லது அதற்கு சமமான) தேர்வில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இந்திய அரசால் நிறுவப்பட்ட இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகங்களில் [Indian Institutes of Science Education and Research (IISERs)] சேர விண்ணப்பதாரர்கள் KVPY அல்லது JEE (Advanced) அல்லது IISER திறனாய்வுத் தேர்வு [IISER Aptitude Test (IAT)] மூலம் விண்ணப்பிக்கலாம். IISER திறனாய்வுத் தேர்வு மே 25, 2025 அன்று IISER திறனாய்வுத் தேர்வு [IISER Aptitude Test (IAT)] நடைபெறும். IISER திறனாய்வுத் தேர்வு (IAT) இந்தியா முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மையங்களில் கணினி அடிப்படையில் நடத்தப்படும். இதில் உயிரியல், வேதியியல், கணிதம், இயற்பியல் ஆகிய பாடங்களிலிருந்து தலா 15 கேள்விகள் என மொத்தம் 60 கேள்விகள் கேட்கப்படும். தேர்வு எழுதுவதற்கான மொத்த நேரம் 180 நிமிடங்கள் ஆகும். ஒரே ஒரு சரியான விடையுடன் பன்முகத் தெரிவு வினாக்கள் (Multiple Choice Questions) அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 1 மதிப்பெண் குறைக்கப்படும். விடை தெரியாத வினாக்களுக்கு 0 மதிப்பெண் வழங்கப்படும். IISER திறனாய்வுத் தேர்வில் அதிகபட்ச மதிப்பெண்கள் 240 ஆகும். 240 மதிப்பெண்களில் ஒரு மாணவர் பெற்ற மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் (Rank List) தயாரிக்கப்படும். IAT மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும் மற்ற கல்வி நிறுவனங்கள் நாட்டின் மிகச் சிறந்த கல்வி நிறுவனங்களான இந்திய அறிவியல் கழகம், பெங்களூரு [Indian Institute of Science (IISc), Bangalore] வழங்கும் நான்கு வருட படிப்பு Bachelor of Science (Research) மற்றும் இந்திய தொழில்நுட்பக் கழகம், சென்னை [Indian Institute of Technology, Madras (IITM)] வழங்கும் நான்கு வருட படிப்பு BS Medical Sciences and Engineering ஆகிய படிப்புகளுக்கு IISER திறனாய்வுத் தேர்வு (IAT) மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. மேற்குறிப்பிட்ட படிப்புகளில் (IISc/IITM) விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் www.iiseradmission.in வலைதளத்தில் IISER திறனாய்வுத் தேர்வுக்கு (IAT) விண்ணப்பிக்க வேண்டும். மேலும், இந்திய அறிவியல் கழகம், பெங்களூரு (IISc Bengaluru) அல்லது இந்திய தொழில்நுட்பக் கழகம், சென்னை (IIT Madras) வலைதளங்களிலும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். முக்கிய தேதிகள் நிகழ்வுகள் IAT விண்ணப்பிக்க கடைசி நாள் 15.04.2025 IISER திறனாய்வுத் தேர்வு (IAT) 25.05.2025 IISER மாணவர் சேர்க்கை மற்றும் IISER திறனாய்வுத் தேர்வு (IAT) ஆகியவை பற்றிய விரிவான தகவல்களைப் பெற www.iiseradmission.in வலைதளத்தைப் பார்க்கவும். தொடர்புடைய இணைப்புகள் தகவல் கையேடு (Information Brochure) IAT தேர்வு பாடத்திட்டம் (IAT Syllabus) மாதிரித் தேர்வு (Mock Test) முந்தைய வருட வினாத்தாள்கள் Bachelor of Science (Research) - IISc Bengaluru BS Medical Sciences and Engineering - IIT Madras ஆதாரம்: www.iiseradmission.in