இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகங்கள் பல்துறை (Interdisciplinary) அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சியை ஒருங்கிணைக்கவும், மேம்படுத்தவும் பெர்ஹாம்பூர், போபால், கொல்கத்தா, மொஹாலி, புனே, திருவனந்தபுரம் மற்றும் திருப்பதி ஆகிய இடங்களில் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகங்கள் [Indian Institutes of Science Education and Research (IISERs)] இந்திய அரசால் நிறுவப்பட்டன. பல ஆண்டுகளாக இந்தக் கல்வி நிறுவனம் திறமையான மாணவர்களை வெற்றிகரமாக ஈர்த்து வருகிறது. மாணவர்களை அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபடுத்தி சமூகப் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளைக் கண்டுபிடித்து தேசத்தை வடிவமைக்க உதவுவதே இந்தக் கல்வி நிறுவனத்தின் முக்கிய குறிக்கோளாகும். விண்ணப்பிக்கும் முறை இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகங்கள் திறனாய்வுத் தேர்வுக்கு [IISER Aptitude Test (IAT)] விண்ணப்பிக்கும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ள காணொலியில் விளக்கப்பட்டுள்ளது. ஆதாரம்: Tamil Nadu School Education Department முக்கியத் தேதிகள் விண்ணப்பிக்க கடைசி நாள் 13.04.2026 IISER திறனாய்வுத் தேர்வு (IAT) ஜூன் 7, 2026 விண்ணப்பத்தில் திருத்தம் செய்யும் நாள்கள் 11:00 AM, ஏப்ரில் 16, 2026 - 11:55 PM, ஏப்ரில் 18, 2026 தேர்வுக்கூட நுழை ஒப்புதல் சீட்டு மே 24, 2026 IISER மாணவர் சேர்க்கை மற்றும் IISER திறனாய்வுத் தேர்வு (IAT) ஆகியவை பற்றிய விரிவான தகவல்களைப் பெற www.iiseradmission.in வலைதளத்தைப் பார்க்கவும். தொடர்புடைய இணைப்புகள் தகவல் கையேடு (Information Brochure) IAT தேர்வு பாடத்திட்டம் (IAT Syllabus) மாதிரித் தேர்வு (Mock Test) முந்தைய வருட வினாத்தாள்கள் Bachelor of Science (Research) - IISc Bengaluru ஆதாரம்: www.iiseradmission.in