NEET (UG) தேர்வு இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான NEET (UG) 2023 தேர்வுக்கு தேசியத் தேர்வு முகமை [National Testing Agency (NTA)] நிகழ்நிலை விண்ணப்பங்களை (Online Applications) வரவேற்கிறது. தமிழ், ஆங்கிலம் உட்பட 13 மொழிகளில் NEET (UG) தேர்வு நடத்தப்படும்NEET (UG) தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலம் மார்ச் 6 முதல் ஏப்ரல் 6, 2023 வரைNEET (UG) தேர்வு நடைபெறும் நாள் மே 7, 2023 (ஞாயிற்றுக்கிழமை) இந்திய மருத்துவ முறையின் இளங்கலை படிப்புகளான பிஏஎம்எஸ், பியூஎம்எஸ் மற்றும் பிஎஸ்எம்எஸ் (BAMS, BUMS and BSMS) ஆகிய படிப்புகளில் சேரவும் NEET (UG) தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். மேலும், ஆயுதப்படை மருத்துவ சேவை மருத்துவமனைகளில், மிலிட்டரி நர்சிங் சர்வீஸில் [Military Nursing Service (MNS)] நான்கு ஆண்டு B.Sc. நர்சிங் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் 2023-ஆம் ஆண்டிற்கான NEET (UG) தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேர்வு முறை NEET (UG) நுழைவுத் தேர்வில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் (தாவரவியல் மற்றும் விலங்கியல்) [Physics, Chemistry and Biology (Botany and Zoology)] ஆகிய பாடங்களிலிருந்து 200 பன்முகத் தெரிவு வினாக்கள் (Multiple Choice Questions) கேட்கப்படும். ஒவ்வொரு பாடமும் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொன்றிலும் 50 கேள்விகள் கேட்கப்படும். இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை 200 நிமிடங்கள் (3 மணி நேரம் 20 நிமிடங்கள்) தேர்வு நடைபெறும். தகவல் குறிப்பேடு NEET (UG) 2023 தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் https://neet.nta.nic.in/ வலைத்தளத்தில் உள்ள விரிவான தகவல் குறிப்பேட்டைப் (Information Bulletin) பார்க்கவும். NEET (UG) 2023 தேர்வு குறித்த தகவல்களை அவ்வப்போது பெற www.nta.ac.in மற்றும் www.neet.nta.nic.in ஆகிய அதிகாரப்பூர்வ வலைத்தளங்களைப் பார்வையிட மாணவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். தொடர்புக்கு NEET (UG) 2023 தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாணவர்கள் 011-40759000 என்ற எண்ணை அழைக்கலாம் அல்லது neet@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். கற்றல் வளங்கள் IIT-Professor Assisted Learning (IIT-PAL)National Test AbhyasNTA Mock Test ஆதாரம்: NEET (UG) 2023