தமிழ்மொழி வளர்ச்சிக்கெனத் தமிழ்நாடு அரசால் தோற்றுவிக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிப் பணிகள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன், தமிழ் முதுகலை பட்டப் படிப்பு (M.A. Tamil) மற்றும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலை பட்டப்படிப்பு (Five Years Integrated Post Graduate M.A. Tamil) மற்றும் தமிழ் முனைவர் பட்ட வகுப்பு (Ph.D.) ஆகியன இந்நிறுவனத்தில் ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தப் பெற்று வருகின்றது. உள்கட்டமைப்பு வசதி / மாணவர் நலன் சிறந்த உட்கட்டமைப்புடன் கூடிய ஆய்வு நூலகம் இருபாலருக்கான தனித்தனி கட்டணமில்லா விடுதி மற்றும் மூன்று வேலை உணவு வசதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய நுண்ணறிவு வகுப்பறைகள் (Smart Class Rooms) பட்டியல் / பழங்குடி இனத்தவர் / பிற்படுத்தப்பட்ட / மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான மத்திய, மாநில அரசுகளின் கல்வி உதவித்தொகை ஐந்தாண்டு ஒருங்கிணைந்த முதுகலைத் தமிழ் (15 மாணவர்கள்) பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு விதிமுறைகளுக்குட்பட்டு திங்கள்தோறும் கல்வி உதவித்தொகை ரூ.2000/- வீதம் வழங்குதல் முதுகலைத் தமிழ் (15 மாணவர்கள்) பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு விதிமுறைகளுக்குட்பட்டு கல்வி உதவித்தொகை திங்கள்தோறும் ரூ.2000/- வீதம் வழங்குதல் முனைவர் பட்டம் ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்களுள் தெரிவின் அடிப்படையில் 8 மாணவர்களுக்குத் திங்கள்தோறும் ரூ.5000/- ஆய்வு உதவித் தொகை ஒருங்கிணைந்த ஐந்தாண்டு படிப்பில் பயிலும் மாணவர்கள் மூன்றாமாண்டு நிறைவு பெற்று விருப்பத்தின் அடிப்படையில் இளங்கலைப் பட்டத்துடன் வெளியேறும் வசதி. பட்டப்படிப்புடன் கூடுதலாக பகுதி நேர பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகள் படிக்கும் வசதிஆசிரியர் தகுதித்தேர்வு (TET) மற்றும் பல்கலைக்கழக நல்கைக் குழுவால் நடத்தப்படும் தேசிய தகுதித்தேர்வு/மாநிலத் தகுதித் தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி (NET/SET) வகுப்பு. விதிமுறைகள் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலை (Five Years Integrated P.G.): பள்ளிக்கல்வித் துறையினால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 10+2 கல்விப் படிநிலைகளில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். மொழிப் பாடமாகத் தமிழ் படித்திருக்க வேண்டும். முதுகலை: உயர்கல்வித் துறை மற்றும் பல்கலைக்கழக நல்கைக்குழு விதிகளின்படி அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 10+2+3 கல்விப் படிநிலைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இளங்கலை இளநிலை அறிவியல் பட்டப் படிப்புகளில் மொழிப் பாடமாகத் தமிழ் படித்திருக்க வேண்டும். இளநிலைப் பட்டப் படிப்பில் ஐந்தாம் பருவத்தில் தேர்ச்சி பெற்று, ஆறாம் பருவ முடிவுகளுக்காகக் காத்திருக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். ஒட்டு மொத்தத் தேர்ச்சி மதிப்பெண் பட்டியல் அளித்த பின்னரே சேர்க்கை உறுதி செய்யப்படும். மேற்கண்ட அனைத்துப் படிப்புகளிலும் மாணவர் எண்ணிக்கையைப் பொறுத்து ஒரு குறிப்பிட்ட பாடத்தை நடத்துவது குறித்துப் பல்கலைக்கழகம் முடிவெடுக்கும். வயது வரம்பு:27 வயதுக்குட்பட்டவர்களாகவும் 01.07.2026 அன்று ஒருங்கிணைந்த ஐந்தாண்டு முதுகலைப் பட்டப் படிப்பிற்கு 21 வயதுக்குட்பட்டவர்களாகவும் மற்றும் முதுகலை பட்டப் படிப்பிற்கு இருத்தல் வேண்டும். மேலும் SC/SCA/ST/BC/BCM/MBC/DNC பிரிவினருக்கு வயது வரம்பில் 3 ஆண்டுகள் தளர்வும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 5 ஆண்டுகள் தளர்வும் அளிக்கப்படும். விண்ணப்பிக்கும் முறை 2026-27ஆம் கல்வியாண்டிற்கான ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலை பட்ட வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. விண்ணப்பங்கள் நிறுவன வலைத்தள (www.ulakaththamizh.in) முகவரியில் பதிவிறக்கம் செய(வாவ்.உலகத்தமிழ்.இன் ல் பெற்றுக் கொள்ளலாம் (அ) அஞ்சலில் பெற விரும்புவோர் விண்ணப்பக் கட்டணத்துடன் (வங்கி வரைவோலை "இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்" என்ற பெயருக்கு எடுக்கப்பட்டது) தன் முகவரி குறிப்பிட்டு ரூ.50/-க்கான அஞ்சல்தலை ஒட்டிய உறையுடன் நிறுவன முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். பதிவிறக்கம் செய்த விண்ணப்பப் படிவத்தைத் தனது சொந்தக் கையெழுத்தால் நிறைவு செய்யவும். பின்னர் நிறைவு செய்த விண்ணப்பப் படிவத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் வங்கி இரசீதையும் இணைத்து அனைத்து இணைப்புகளுடன் இயக்குநர் (கூ.பொ), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை 600113 என்ற முகவரிக்கு அஞ்சல் (அ) நேரில் இறுதி நாளுக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய இறுதி நாள் ஒருங்கிணைந்த முதுகலை பட்டப் படிப்பு - 15.06.2026 முதுகலைப் பட்டப் படிப்பு - 30.06.2026 நேரடி சேர்க்கை (Spot Admission) நடைபெற்று வருகிறது. விடுதியில் உள்ள ஒழிவிடங்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப முதலில் வருபவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அடிப்படையில் விடுதி அறைகள் ஒதுக்கீடு செய்யப்படும் வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை 9