சென்னைப் பல்கலைக்கழக மாணவர் இலவசக் கல்வித் திட்டம் சென்னைப் பல்கலைக்கழக மாணவர் இலவசக் கல்வித் திட்டத்தின் கீழ் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இணைப்பு பெற்ற சுயநிதி மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளில் சேருவதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள் மாணவர்கள் முதல் முயற்சியிலேயே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், பதினொன்றாம் மற்றும் பன்னிரண்டாவது மதிப்பெண் சான்றிதழ்கள் சமர்ப்பிக்க வேண்டும், இல்லையெனில் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். வருவாய்த் துறை வட்டாட்சியர் (Tahsildar) வழங்கிய வருமான சான்றிதழின்படி, மாணவரின் குடும்ப வருட வருமானம் ரூபாய் மூன்று லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒவ்வொரு கல்லூரிக்கும் குறைந்தபட்சம் 3 இலவச இருக்கைகள் ஒதுக்கப்படும் (அதாவது ஒவ்வொரு பிரிவின் கீழும் 1 இலவச இருக்கை). இவை பல்கலைக்கழகத்தால் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கைக்கு மேலே கூடுதல் இடங்களாக அனுமதிக்கப்படும். பிரிவு 1: மூன்றில் ஒரு பங்கு இருக்கைகள் (1/3rd of seats) பெற்றோரை இழந்த மற்றும் ஆதரவற்ற மாணவர்கள் முக்கிய பாடங்களில் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் வழங்கப்படும். பிரிவு 2: மூன்றில் ஒரு பங்கு இருக்கைகள் (1/3rd of seats) முதல் பட்டதாரி மாணவர்கள் ஊனமுற்ற மாணவர்கள் மற்றும் திருநங்கைகள் முக்கிய பாடங்களில் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் வழங்கப்படும். பிரிவு 3: மூன்றில் ஒரு பங்கு இருக்கைகள் (1/3rd of seats) முக்கிய படங்களில் 80% மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்குத் தகுதி (MERIT) அடிப்படையில் வழங்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் 1:2 என்ற விகிதத்தில் மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள். பதிவேற்றம் செய்ய வேண்டிய சான்றிதழ்கள் பதினொன்றாம் மற்றும் பன்னிரண்டாவது மதிப்பெண் சான்றிதழ் சமீபத்திய வருமான சான்றிதழ் (ஒரு வருடத்திற்குள்) வட்டாட்சியரிடமிருந்து பெற்றிருக்க வேண்டும் பிரிவு 1 மற்றும் பிரிவு 2 சேர்ந்த மாணவர்கள் முதல் பட்டதாரி சான்றிதழ் வட்டாட்சியரிடமிருந்து பெற்றிருக்க வேண்டும் (பொருந்தினால்) மாற்றுத்திறனாளி சான்றிதழ் - மாற்றுத்திறனாளிகள் நலத்துறையிடமிருந்து பெற்றிருக்க வேண்டும் (பொருந்தினால்) தாய் / தந்தை இறப்பு சான்றிதழ் (பொருந்தினால்) மேலே குறிப்பிட்டுள்ள ஆவணங்கள் பதிவேற்றம் செய்யத் தவறினால் உங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும். (வருமான சான்றிதழ் அல்லது முதல் பட்டதாரி சான்றிதழ் கிடைக்கத் தாமதமானால் வட்டாட்சியரிடமிருந்து பெற்ற ஒப்புதல் சீட்டை பதிவேற்றம் செய்யலாம். சான்றிதழைக் கலந்தாய்வுக்கு வரும்பொழுது சமர்ப்பிக்கவும்) இலவசக் கல்வித் திட்ட விண்ணப்பத்தையும் அதில் குறிப்பிட்டுள்ள சான்றிதழ்களுடன் சென்னைப் பல்கலைக்கழக இணையதளத்தில் www.unom.ac.in +2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆதாரம்: சென்னைப் பல்கலைக்கழக மாணவர் இலவசக் கல்வித் திட்டம்